பக்கம் எண் :

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் சூ.56457

தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்
அன்னார் இருவரைக் காணிரோ
 

என்றுவினவ அதற்கு அவருள் ஒருவர்
 

காணேம் அல்லேம் கண்டனம் கடத்திடை
மாணெழில் அண்ணலோடு அரும்சுரம் முன்னிய
மாணிழை மகளிர் தாயர்நீர் போல்திர்
பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செயும்
நினையுங் கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே
.............................................................................................
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்
அறந்தலை பிரியா ஆறுமற் றதுவே
 

எனவிடையிறுத்தது  நேருக்குநேர்    உரையாடலாக   அமைந்தது.  செவிலி வினாவும் அந்தணர் விடையும்
இடையில் யாதோர் இணைப்புச் சொல்லும் இன்றி நேருக்குநேர் அமைந்தன காண்க.
 

“கயமலருண்  கண்ணாய்  காணாய்’   என்னும்  கலிப்பாடல்  (குறிஞ்சி-1)  உரையாடல் பாங்கில் இன்றித்
தோழி தலைவியிடம் கூறியதாக அமைந்துள்ளது. இது உலகியல் வழக்குச் செய்யுளாம்.
 

‘பரிவுண்ட     புணர்ச்சியுள்’  என்னும்    நெய்தற்  கலிப்பாட்டில்’  (25)  தேறுதல்  ஒழிந்த  காமத்து
மிகுதிறத்தால்  தலைவி  ஊரவரை  நோக்கிப்    புலம்புவதும்  ஊரவர்  கூறுவதும்நேர்  உரையாடல்போல்
அமைந்தும்,  அவ்வுரையாடல்களைத்  தொகுத்துக்    கண்டோர்  கூறியதாக   முடிவுபெற்றும்  இருப்பதால்
அப்பாட்டு  புலனெறி  வழக்குச்   செய்யுளாம்.   ‘எனவாங்கு’ என்பதுபோலும் தனிச்  சொல்லும் சுரிதகமும்
உள்ள     பாடல்கள்    பெரும்பாலும்   புலனெறி     வழக்குச்   செய்யுள்களாகவே    அமைந்துள்ளன.
‘மலிதிரையூர்ந்து எனும் முல்லைக் கலிப்பாவிலும், (4) அவ்வாறமைந்தமைந்தமை காண்க.
 

நச்சினார்க்கினியர்,  ‘மனைநெடுவயலை  (ஐங்11)  என்னும்  பாடலைக்காட்டி அதில் “இதனுள் முதல்கரு
உரிப்பொருள்