பக்கம் எண் :

36தொல்காப்பியம் - உரைவளம்

இக்   களிற்றியானை  நிரையுள்,  மருதத்திற்கு  முதலுங்கருவும்  வந்து  உரிப்பொருளாற்  சிறப்பெய்தி
முடிந்தது. ‘வண்டூது பனிமலர்’ எனவே வைகறையும் வந்தது.7
  

“கானன் மாலைக் கழிப்பூக் கூம்ப
நீனிறப் பெருங்கடல் பாடெழுந் தொலிப்ப
மீனார் குருகின் மென்பறைத் தொழுதி
குவையிரும் புன்னைக் குடம்பை சேர.
வசைவண் டார்க்கு மல்குறு காலைத்
தாழை தளரத் தூக்கி மாலை
யழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க்
காமர் நெஞ்சங் கையறு பினையத்
துயரஞ் செய்துநம் மருளாராயினு
மறாஅ லியரோ வவருடைக் கேண்மை
யளியின் மையி னவணுறைவு முனைஇ
வாரற்க தில்ல தோழி கழனி
வெண்ணெய் லரிஞர் பின்றைத் ததும்புந்
தண்ணுமை வெரீஇய தடந்தா ணாரை
செறிமடை வயிரிற் பிரற்றிப் பெண்ணை
யகமடற் சேக்குந் துறைவ
னின்றுயின் மார்பிற் சென்றவென் னெஞ்சே”,

(அகம் - 40)

7. இதில்  பழனம்  நில  முதற்பொருள்  பனிமலரில்  வண்டு  ஊதும்  நேரம் வைகறையாதலின் அச்சிறு
பொழுதும்  ஆகிய  முதற்பொருளும்,  காரான்வள்ளை  முதலிய  கருப்பொருளும், பிறவும் ஒருத்தியை
வதுவை  அயர்ந்தனை  யாரையோ நிற்புலக்கேம், சென்றீ பெரும நிற்றகைக்குநர் யாரே என்பனவற்றால்
ஊடலும் வாயில் மறுத்தலுமாகிய உரிப்பொருளும் உள்ளமை காண்க.