பக்கம் எண் :

மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும் சூ.57459

புணர்தலும்    பிரிதலும் இருத்தலும்   இரங்கலும்  ஊடலும் என்று சொல்லப்பட்ட ஐந்துபொருண்மையும்,
சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார் - (அவ்வைந்திணைக்   கண்ணும்   தலைமகனாகப்  புலனெறி வழக்கம்
செய்ய  வேண்டின்,)  நாடன்  ஊரன்  சேர்ப்பன்  என்னும் பொது   பெயரானன்றி   ஒருவர்க்கு உரித்தாகி
வரும் பெயர்1 கொள்ளப் பெறார் புலவர்.

(57)
 

நச்சினார்க்கினியர்
 

57. மக்கள்...............பெறாஅர்
 

இது முற்கூறிய புலநெறி வழக்கிற்குச் சிறந்த ஐந்திணைக்காவதோர் வரையறை கூறுகின்றது.
 

(இ-ள்)     மக்கள்    நுதலிய   அகன்   ஐந்திணையும்  -  மக்களே  தலைமக்களாகக்  கருதுதற்குரிய
நடுவணைந்திணைக்  கண்ணும்;  சுட்டி  ஒருவர்    பெயர்  கொளப்பெறார்  -  திணைப்பெயராற் கூறினன்றி
ஒருவனையும் ஒருத்தியையும் விதந்துகூறி, அவரது இயற்பெயர் கொள்ளப்பெறார் என்றவாறு.
 

இது     நாடக   வழக்குப்பற்றி   விலக்கியது. அவை வெற்பன் துறைவன் கொடிச்சி கிழத்தி யெனவரும்.
மக்கள்  நுதலிய  என்பதனானே  மக்களல்லாத    தேவரும்  நரகருந்  தலைவராகக்    கூறப்படாரெனவும்
அகனைந்திணையும்  என்றதனானே  கைக்கிளையும்   பெருந்திணையுஞ் சுட்டி ஒருவர்   பெயர் கொண்டுங்
கொள்ளாதும்    வருமெனவுங்    கொள்க.     அகனைந்திணையெனவே    அகமென்பது     நடுவுநின்ற
ஐந்திணையாதலிற்.  கைக்கிளையும்  பெருந்திணையும்  அவற்றின்    புறத்து  நிற்றலின்   அகப்புறமென்றும்
பெயர் பெறுதலும் பெற்றாம்.
 


1 இயற்பெயர் நாடன் ஊடன் என்பன இயற்பெயரல்ல. நிலப்பெயரடியாக வந்தன.