1 அவை-அகன் ஐந்திணைகள் 2 உரிப்பொருள் தலைவர் அகத்திணைகட்கு ஒருவராதலும் புறத்திணைகளுக்குத் தலைவர் பலராதலும் வரையறை என்பது இவர் அடுத்துவரும் சூத்திரவுரையில் கூறியுள்ளார். தொல்காப்பியர் அவ்வாறு கூறவில்லை. ‘அளவுதல்’ என்பதால் கொண்டார். “வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே” ( ) என்னும் பாடலில் தலைவனும் தலைவியும் உரிப்பொருள் தலைவராமை காண்க. 3 வெள்ளி வீதியாரும் ஆதிமந்தியும் புலவராயிருந்து தத்தம் வாழ்க்கையை அப்பாடல்களில் கூறினாராயினும் தத்தம் இயற்பெயரைச் சுட்டாமல் கூறியிருத்தலின் அவர் பாடல்கள் அகப்பாடல்களாயின. 4 காஞ்சித்திணையில் தாபதநிலைத் துறைப்பாற்பட்டுப் புறத்திணையாம். 5 சார்த்துவகை-உவமையாக எடுத்துச் சார்த்தியவகை. |