பக்கம் எண் :

மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும் சூ.57461

வருகின்ற     (55) சூத்திரத்துப்   ‘பொருந்தின்’   என்னும்  இலேசானே இச்சார்த்துவகை கோடும். இது
பெயரெனப்பட்ட  கருப்பொருளாதலிற்6  கூற்றிற்கு  உரிய  தோழியும்  பாங்கனும்  முதலிய வாயிலோரையும்
பொதுப் பெயரானன்றி இயற்பெயர்த் தொடக்கத்தன கூறப்பெறாரென்று கொள்க.
 

உதாரணம் :-
 

“முகிழ்முகிழ்த் தேவர வாயினு முலையே.
யரவெயிற் றொடுக்காமா டஞ்சுதக் கனவே
களவறி வாரா வாயினுங் கண்ணே
நுழைநுதி வேலி னோக்கரி யவ்வே
யிளைய ளாயினு மணங்குதக் கிவளே
முளையிள நெருப்பின் முதுக்குறைந் தனளே
யதனா, னோயில ளாகுக தில்ல
சாயிறைப் பணைத்தோ ளீன்ற தாயே.”
 

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாக் கைக்கிளை.
 

“ஆள்வினை முடித்த வருந்தவ முனிவன்
வேள்வி போற்றிய விராம னவனொடு
மிதிலை மூதூ ரெய்திய ஞான்றே
மதியுடம் பட்ட மடக்கட் சீதை
கடுவிசை வின்ஞா ணிடியொலி கேளாக்
கேட்ட பாம்பின் வாட்ட மெய்தித்
துயிலெழுந்து மயங்கின ளதாஅன்று மயிலென
மகிழ் - - - “
 

இது சுட்டி ஒருவர் பெயர் கொண்ட கைக்கிளை.1
   

இஃது   அசுரமாகிலின்2,   முன்னைய   மூன்றுங்   கைக்கிளை   யென்றதனாற்   கோடும்.  “யாமத்து
மெல்லையும்”
(நெய்தற்கலி-22) என்றது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாப் பெருந்திணை.
 


6 பெயர்   என்பது   நிலமக்கள்   பெயராகும்   அதனால்   பெயர் என்பது ஈண்டுமக்களைக் குறிக்கும்
அகப்பாடலில்   மக்கட்   பெயர்   கூறப்படாதுஎனவே   தலைவன்  தலைவியர்  இயற்பெயரேயன்றித்
தோழிபாங்கன் முதலிய அகமாந்தர் பெயரும் இயற்பெயராயின் கூறப்பெறா.

1 இராமன் சீதை எனத் தலைமக்கள் பெயர்வந்த கைக்கிளை.

2 கடுவிசைவில்  நாண்ஒலியைச்  சீதை கேட்டாள் என்பதால் இராமன் வில்லேற்றம் கொண்ட ஆசுரம்
கூறப்பட்டது.