பக்கம் எண் :

462தொல்காப்பியம் - உரைவளம்

“பூண்டாழ் மார்பிற் பொருப்பிற் கோமான்
பாண்டியன் மடமகள் பணைமுலைச் சாந்தம்
வேறு தொடங்கிய விசய னெஞ்சத்
தாரழ லாற்றா தை - - -
பொதியிற் சாந்த மெல்லாம் பொருதிரை
முத்தினு முழங்கழற் செந்தீப்
பொத்துவது போலும் புலம்புமுந் துறுத்தே.”
 

இது சுட்டி ஒருவர் பெயர்கொண்ட பெருந்திணை3
 

இவை     சான்றோர்  செய்யுளுட்  பெருவரவிற்றின்மையினன்றே  முற்சூத்திரத்து  முன்னும்  பின்னும்4
இவற்றை வைத்த தென்பது.
 

“முட்காற் காரை முதுகனி யேய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கட்டார
நிறுத்த வாயந் தலைச்செல வுண்டு
பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த
வெச்சி லீர்ங்கை விற்புறந் திமிரிப்
புலம்புக் கனனே புல்லணற் காளை
யொருமுறை யுண்ணா வளவைப் பெருநிரை
யூர்ப்புற நிறையத் தருகுவன் யார்க்குந்
தொடுத லோம்புமதி முதுகட் சாடி
யாதரக் கழுமிய துகளன்
காய்தலு முண்டக் கள்வெய் யோனே.”

(புறம்-258)
 

இது வெட்சித்திணை பெயர் கொள்ளாது வந்தது.
 

“முலைபொழி தீம்பான் மண்சேறு படுப்ப
மலர்தலை யுலக மோம்பு மென்ப
பரிசிலைத் தொண்டைப் பல்லவ னாணையின்
வெட்சித் தாயத்து வில்லே ருழவர்
பொருந்தா வடுகர் முனைச்சுரங்
கடந்து கொண்ட பல்லா னிரையே.”

(13)
 

இது  வேந்துவிடு  தொழிற்கண் வேந்தனைப் பெயர் கூறிற்று5. ஒழிந்தனவும் புறந்திணையியலுட் காண்க.  

(54)
 

3 பாண்டியன் மகள் விசயன் எனப்பெயர் சுட்டப்பட்டன.

4 அகன்   ஐந்திணைக்கு   முன்னும் அகன்  ஐந்திணைக்குப் பின்னும். முன் கூறப்பட்டது கைக்கிளை -
பின் கூறப்பட்டது பெருந்திணை.

5 தொண்டைப் பல்லவன் என்பது பெயர்.