பக்கம் எண் :

மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும் சூ.57463

பாரதியார்
 

57. மக்கள்......................பெறாஅர்
 

கருத்து: இது, அன்பினைந்திணைக்குச் சிறந்த ஒரு மரபு கூறுகிறது.
 

பொருள்:-     மக்கள்    நுதலிய     அகனைந்திணையும்  -  மக்கள்  மதிக்கும்   காதல்  கண்ணிய
நடுவணைந்திணைகளிலும்;  ஒருவர்  சுட்டிப்  பெயர் கொளப் பெறாஅர் - தலைமக்கள்   தம்முள்   யாரும்
இயற்பெயர் சுட்டி அகவப்பெறார்.1
 

குறிப்பு:-     காதல்  கண்ணிய   ஐவகை  அகவொழுக்கமும்  நாண்-தன்னலமறக்கும்  அன்பு-காதலாற்
றவறுகாணாமடம்-முதலிய  சால்புகளாற்    சிறந்த  மக்கட் தன்மைக்கே இயைவதாகலின்.   “மக்கள் நுதலிய
அகனைந்திணை”  எனக்கூறப்பட்டது    ‘மக்கள் நுதலிய, என்பது மக்கள் தாம்   பொருளாகக் கருதிய என
விரியும்.  இனி,  மக்கள்    என்பதை,  மக்கட்டன்மை கட்டுதலாகக் கொண்டு   அத்தன்மை  நுதலிய எனக்
கொள்ளுதலும் ஒன்று.
 

தலைமக்கள்   இருபாலோருள்  எவரும்  தம்பெயர்சுட்டி  அகவப்பெறாராதலின், இருபாற்கு முரித்தாகிய
‘ஒருவர்’ என்னும் பொதுப் பெயரால் அம்மரபு கூறப்பட்டது.
 

‘சுட்டி  ஒருவர் பெயர்கொளப் பெறார்’ என்பதனால் அளவளவில்லை  அகவிச் சுட்டாத  பிறவிடங்களில்
தலைமக்கள்பெயர்    கூறுப்பெறுதல்      தவறாகாதென்பதை,    இளம்பூரணர்     கொண்டபடி    இதில்
குறிப்பெச்சத்தாற்  கொள்ளவிட்டு    ஐயத்திற்கிடம்  வையாமல்,    தொல்காப்பியர்  அடுத்த  சூத்திரத்தில்
தெளியக்கூறுவர்3.
 


1 அகவப்பெறார்-அழைக்கப்பெறார்.

2 உரையாடலில்

3 “சுட்டியொருவர்................தெரியக்கூறுவர்”   -    இப்பகுதி   விளக்கம்   இல்லை.  ஒருவரையொருவர்
அழைக்குமிடத்தில்  சுட்டிப்  பெயர் கூறப்படாது என்பதும் பிறவிடங்களில் கூறப்படும் என்பதும் இவர்
கருத்து    யாண்டும்   சுட்டுதல்    இல்லையாதலின்    இது    பொருந்தாது.    ‘இளம்    பூரணர்
கொண்டபடிக்குறிப்பெச்சத்தால்   கொள்ளவிட்டு    என்றிருப்பதுதவறு.    இளம்பூரணர்    உரையில்
அவ்வாறில்லை.