மருங்கின் அளவுதல் இல-அகத்திணை மருங்கின் வருதல் இல்லை. (ஏகாரம் ஈற்றசை) |
(58) |
இதனாற் சொல்லியது, ஒருவர்க்குரித்தாகி வரும் பெயர் அகத்திணை பற்றி வரும் கைக்கிளை பெருந்திணையினும் வரப்பெறாது என்பதூஉம், புறத்திணையுள் வரும் என்பதூஉம், ஆண்டும் பாடாண் பாட்டுக் காமம் பொருளாகவரின் அவ்வழி வரூஉம் என்பதூஉம் கூறியவாறு. இதனான் அகப்பொருள் ஒருவரைச் சாராது பொதுப்பட வருமென்பது கொள்க.* |
நச்சினார்க்கினியர் |
58. புறத்திணை...............இலவே. |
இது புறத்திணைக்குத் தலைவர் ஒருவராதலும் பலராதலும் உரிப்பொருட்குத் தலைவர் பலராகாமையுங் கூறலின், எய்தாத தெய்துவித்து எய்தியது விலக்கிற்று.1 |
(இ-ள்) அகத்திணை மருங்கிற் பொருந்தின் - ஒருவனையும் ஒருத்தியையும் விதந்து கூறும் இயற்பெயர் அகத்திணைக்கண்ணே வந்து பொருந்துமாயின்; புறத்திணை அளவுதல் மருங்கின் அல்லது இல ஆண்டும் புறத்திணை கலத்தலிடத்தின் அல்லது வருதலில்லை என்றவாறு. |
* கைக்கிளை பெருந்திணைகள் புறமாகாது அகப்புறமாகலின் அவற்றிலும் சுட்டியொருவர் பெயர் வராது என்பது இவர் கருத்து. புறத்தில்தான் காமப்பகுதி வருமிடங்களில் இயற்பெயர் சுட்டி வரலாம் என்பர். 1 இதுகாறும் புறத்திணை பற்றிய பேச்சு இன்மையின் புறத்திணைத் தலைவர் பலராகலாம் என்பது எய்தவில்லை. அதை இச்சூத்திரத்தான் எய்துவித்தார். இதுகாறும் அகத்திணைப்பேச்சே நிகழ்ந்துவருதலின் அகத்திணைக்குத் தலைவர் பலராகலாம்என்பது எய்தியது பலராகார் ஒருவரேயாவர் என இச்சூத்திரம் கூறலின் எய்தியது விலக்கினார். இவர் இவ்வாறு கூறியது இவர் உரையில் எழுதியது கொண்டேயாம். சூத்திரத்தில் ஒரு குறிப்பும் இல்லை. |