பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.337

இது பொருட்பிரிவிடைத் தோழிக்கு உரைத்தது.
  

இக்  கறிற்றியாணை  நிரையுள்,  நெய்தற்கு  முதலுங்   கருவும்  வந்து  உரிப்  பொருளாற் சிறப்பெய்தி
முடிந்தது.8
  

இச்சிறப்பானே9    முதலின்றிக்   கருவும்   உரிப்பொருளும்   பெறுவனவும்,   முதலுங்   கருவுமின்றி
உரிப்பொருளே பெறுவனவுங் கொள்க.
  

“திருநகர் விளங்கு மாசில் கற்பி
னரிமதர் மழைக்கண் மாஅ யோளொடு
நின்னுடைக் கேண்மை யெவனோ முல்லை.
யிரும்பல் கூந்த னாற்றமு
முருந்தேர் வெண்ப லொளியுநீ பெறவே”

  

இது   பொருள்  வயிற்  பிரிந்தோன்  சுரத்து  நினைந்து  உரைத்தது.  இது  முதற்பொருளின்றி  வந்த
முல்லை.10
  

“கரந்தை விரைகிய தண்ணறுங் கண்ணி
யிளைய ரேவ வியங்குபரி கடைஇப்
பகைமுனை வலிக்குந் தேரொடு
வினைமுடித் தணர்நங் காத லோரே.”

  

இது வந்தார் என ஆற்றுவித்தது.
  

இது முதலுங் கருவுமின்றி வந்தமுல்லை.
  


8. இதில்  கடல்  கழி  -  முதற்பொருள்   புன்னை,   தாழை பனை  முதலியன கருப்பொருள். நெஞ்சம்
இனைய நம் அருளாராயினும் கேண்மை அறாலியரோ என இரங்குதலால் வருவது உரிப்பொருள்.

9. முறை சிறந்தன என்றதனானே.

10. இதில்  முல்லை  என்பது  கருப்பொருள்  முல்லையே   நீ  மாயோளொடு  கூந்தல்  நாற்றமும்  பல்
 ஒளியும் பெற நின்னுடைக் கேண்மை எவன்? என்பது உரிப்பொருள்.