எனவே, புறத்திணை கருப்பொருளாயும், அதுதான் உவமமாயும் அகத்திணையுட் கலக்குமென்பதூஉம் இதனானே விரித்தாராயிற்று அளவுமெனவே ஒரு செய்யுட் கண்ணும் அப்புறத்திணையாகிய இயற்பெயர்களுஞ் சிறப்புப் பெயர்களும் ஒன்றேயன்றிப் பலவும் வருதலுங் கொள்க. ஒருவரென்பது அதிகாரப்பட்டமையின் அகத்திற்கு வரும் உரிப்பொருட்பெயர் ஒன்றுதல் கொள்க. |
உதாரணம் :- “வண்டுபடத் ததைந்த” என்னும் (1) அகப்பாட்டினுள் “முருகனற்போர் நெடுவே ளாவி யாங்கண்” எனவே புறத்திணைத்தலைவர் இயற்பெயர் ஒன்றே வந்தவாறும் அவன் நிலக் கருப்பொருளாய் அகத்திற்கு வந்தவாறும், உரிப் பொருட்டலைவன் ஒருவனேயானவாறுங் காண்க. “எவ்வியிழந்த வறுமையர் பாணர், பூவில் வறுந்தலைபோலப் புல்லென்று” (குறுந்-19) என்பது கருப்பொருளுவமமாய் வந்தது. |
“கேள்கே டூன்றவும்” என்னும் (39) அகப்பாட்டுப் புறதிணைத் தலைவர் பலராய் அகத்திணைக்கண் அளவி வந்தது. புறத்திணைக்கண் இயற்பெயர் அளவிவரும் என்பதனானே, “முரசுகடிப்பிகுப்பவும் வால்வளை துவைப்பவும்” என்னும் (158) புறப்பாட்டு “எழுவர் மாய்ந்த பின்றை” எனப் புறத்திணைத் தலைவர்1 பலராய் வந்தது. பிறவும் இவ்வாறு வருவன இதனான் அமைக்க. |
உதாரணம் |
“ஏறும் வருந்தின ஆயரும் புண்கூர்ந்தார் நாறிருங் கூந்தற் பொது மகளி ரெல்லாரு முல்லையந் தண்பொழில் புக்கார் பொதுவரோ டெல்லாம் புணர்குறிக் கொண்டு.” |
(கலி-101) |
பொருந்தின் எனவே, தானுந் தன்னொடு பொருந்துவதூஉம் என இரண்டாக்கிச் சார்த்துவகையான் வரும் பெயர்க்குங்கொள்க. |
1 புறத்திணைத் தலைவர் எழுவர் இல்லை. அப்பாடல் தலைவன் ஒருவனே ( ) அவனால் கொல்லப்பட்டவர் எழுவர் ஆதலின் அவரைப் புறத்திணைத் தலைவர் என்றார் பொருந்தாது. |