நாடக வழக்கினுளது முன்னர்ச் சூத்திரத்துட் காட்டினாம். பெயர்கள் பலவாதலின் இல2 வெனப் பன்மை கூறினார். |
(55) |
பாரதியார் |
58. புறத்திணை....................இலவே |
கருத்து:இது மேலதற்கோர் புறனடையாய், எய்தாதது எய்துவித்தது. |
பொருள்:- புறத்திணை மருங்கிற் பொருந்தினல்லது - (சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறுதல்) மேற்சூத்திரத்திற் கூறியாங்குத் தலைமக்கள் தம்முள் அளவளவாப் பிறவிடங்களில் ஐந்திணைப் புறனாய் அமைவதல்லால்; அகத்திணை மருங்கில் அளவுதல் இல-அகவொழுக்கத்தில் அவர் தம்முள் அளவளவலில் இல்லை. |
குறிப்பு:- “சுட்டியொருவர் பெயர்கொளப் பெறுதல்” என்னும் எழுவாய் மேற்சூத்திரத்தின்று தொடர்பு பற்றி வருவிக்கப்பட்டது இனி. ‘அளவுதலையே’ எழுவாயாக்கி “பெயர் சுட்டி அளவுதல் இல” என முடிப்பினும் அமையும். |
அகனைந்திணையில் தலைமக்கள் தம்முள் இயற்பெயர் சுட்டி அளவளாவல் மரபன்றென முற்சூத்திரத்திற் கூறப்பட்டது. எனவே, அளவளாவல் அல்லாத அன்பினைந்திணை கூறுமிடங்களில் தலைமக்கள் பெயர்கொளப் பெறுதல் கடியப்படுமோ எனும் ஐயம் நீக்கற்கு இச்சூத்திரம் எழுந்தமையால், இது முன்னதற்குப் புறனடையாயிற்று. இவ்வாறு காதலர் தம்முள் அளவளவுதல் ஒழிந்த ஏனை அன்பினைந்திணை அகப்பகுதிகளில் அவர் பெயர் சுட்டப் பெறுதலும் ஒருவர் பெயரை மற்றவர் கூறுதலும் இழுக்கன்று. இவ்வுண்மையை, |
“அரிமா சுமந்த அமளிமே லானைத் திருமா வளவனெனத் தேறேன், - திருமார்பின் |
2 இன்று என ஒருமையாற் கூறாது இல எனப்பன்மையாற் கூறினார். |