பக்கம் எண் :

38தொல்காப்பியம் - உரைவளம்

“நறைபரந்த சாந்த மறவெறிந்து நாளா
லுறையெதிர்ந்து வித்திய வூ ழேனற்-பிறையெதிர்ந்த
தாமரை போன்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ
வேமரை போந்தன வீண்டு.”

(திணைமாலை -1)
 

இது மதியுடம் படுத்தது.
  

இது முதற்பொருளின்றி வந்த குறிஞ்சி11.
  

“முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
மலைய னொள்வேற் கண்ணி
முலையும் வாரா முதுக்குறைந் தனளே.”

  

இஃது இளையள் விளைவிலளென்றது. முதலுங் கருவுமின்றி வந்த குறிஞ்சி.
  

இது நாணநாட்டம்12
  

“நாளு நாளு மாள்வினை யழுங்க
வில்லிருந்த மகிழ்வோர்க் கில்லையாற் புகழென
வொண்பொருட் ககல்வர்நங் காதலர்
கண்பனி துடையினித் தோழி நீயே.”

(சிற்றெட்டகம்)
 

இது வற்புறுத்தாற்றியது.
  


11. இதில்  ஏனல்  சாந்தம்  கருப்பொருள்  தாமரை  முகத்துத் தாழ்குழலீர்! சந்தனமரத்தை வெட்டி மழை
பெய்ததை  ஏற்று  விதைத்து  வளர்ந்ததினைப்புன  வழியாக  என் கம்பை ஏற்ற மான்வரக் கண்டீரோ
என்பது உரிப்பொருள்.

12. தலைவியும்  தோழியும்  உன்வழித்  தலைவன்  தன்  குறையைக்  கூறிய  போது தோழி கூறியதாகக்
கொள்க. இதனைக்  கேட்ட  தலைவி  நாளதுவள்  அதுகொண்டு  தோழி  கூட்டம்  உண்மையறியும்
நாணநாட்டம் என்பது தோழி தலைவியிடம் நாடுவது என்று கொள்ளின் இது இங்குப் பொருந்தாது.