x | பிற்பகுதி, சனவரி, பிப்ரவரியின் முற்பகுதி). பின்பனிக்காலம், மாசி, பங்குனி ஆகிய இரண்டு மாதங்களைக் கொண்டது. (பிப்ரவரியின் பிற்பகுதி, மார்ச், ஏப்ரலின் முற்பகுதி). இளவேனில் காலம் சித்திரை, வைகாசி, ஆகிய இரண்டு திங்களைக் கொண்டது. (ஏப்ரலின் பிற்பகுதி, மே, சூனின் முன்பகுதி). முதுவேனில் காலம், ஆனி, ஆடி ஆகிய இரண்டு திங்களைக் கொண்டது (சூனின் பிற்பகுதி, சூலை, ஆகஸ்டின் முற்பகுதி). | சிறுபொழுது ஒரு நாளின் பகுப்பில் அமைவது, சிறுபொழுது ஆறு பிரிவுகளைக் கொண்டது. அவற்றுள் மாலை என்பது இராப் பகுதியின் முற்பகுதி, யாமம் என்பது இராப் பகுதியின் நடுப்பகுதி, வைகறை என்பது இராப்பகுதியின் பிற்பகுதி, விடியல் என்பது பகற் பொழுதின் முற்பகுதி, நண்பகல் என்பது பகற் பகுதியின் நடுப்பகுதி, எற்பாடு என்பது பகற் பகுதியின் பிற்பகுதி ஆகும். | கருப்பொருள் | பாடலுள் பயிலும் பொருட்களுள் ஒன்று கருப்பொருள் அக்கருப்பொருளை எட்டாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. அவை : தெய்வம், உணவு, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதி என்பனவாம். ‘அவ்வகை பிறவும்’ என்று குறிப்பிட்டமையால் மேலும் ஆறு கருப்பொருளைச் சேர்ப்பர் உரையாசிரியர் (20). | உரிப்பொருள் | பாடலுள் பயிலும் பொருட்களுள் ஒன்று உரிப்பொருள், புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் அவற்றின் நிமித்தங்கள் என்பன உரிப்பொருள். இவ்வுரிப் பொருள்களை குறிஞ்சிக்குப் புணர்ச்சியும், பாலைக்குப் பிரிவும், முல்லைக்கு இருத்தலும், நெய்தலுக்கு இரங்கலும், மருதத்திற்கு ஊடலும் என்று பாகுபடுத்தப்பட்டுள்ளன (16). | மயக்கம் | முதற் பொருளாகிய நிலமும் பொழுதும் ஒரு திணையினின்று மற்றொரு திணைக்கு மயங்கவும் பெறும் (14). அவ்வாறு மயங்குவதில் முதற்பொருளும், கருப்பொருளும் பங்கு கொள்ளும் ஆனால், உரிப்பொருள் மயங்காது (15). |
|
|