பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.339

இஃது உரிப்பொருளொன்றுமே வந்த பாலை.
  

“பூங்கொடி மருங்கி னெங்கை கேண்மை
முன்னும் பின்னு மாகி
யின்னும் பாண ணெம்வயி னானே.”

  

இதுவாயின் மறுத்தது.13
  

இஃது உரிப்பொருளொன்றுமே வந்த மருதம்.
 

“அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டெனப்
பூசல் வாயாப் புலம்புமளைக் கலங்கி
யேதின் மாக்களு நோவர் தோழி
யென்று நோவா ரில்லைத்
தெண்கடற் சேர்ப்ப னுண்டவென் னதக்கே.”

  

இது கழிபடர்.
  

இது பெயரானும் உரிப்பொருளானும் நெய்தலாயிற்று.14
  

இங்ஙனம்     கூறவே  உரிப்பொருளின்மேற்  பொருட்பயமின்றென்பது பெற்றாம். இதனானே முதல் கரு
வுரிப்பொருள்  கொண்டே  வருவது  திணையாயிற்று.  இவை,  பாடலுட்பயின்ற வழக்கே இலக்கணமாதலின்,
இயற்கையாம் அல்லாத சிறுபான்மை வழக்கினைச் செயற்கையென மேற்பகுப்பர்.15
  


13. பூங்கொடியாகிய   பரத்தையிடத்துத்   தலைவனுக்குக்   கேண்மையை   நம்மைப்   பிரியுமுன்னரும்
பின்னரும்  உளதாகச்செய்ததோடமையாது   இன்னமும்   பாணன்   வாயில்   வேண்டி   தம்மிடம்
வருகின்றானே’ என்று கூறி வாயில் மறுத்தது இச்செய்யுள்.

14. சேர்ப்பன்   எனநெய்தல்  நிலத்தலைவன்  பெயர்  வந்தமையால்  நெய்தலாயிற்று  மதியும் அரவின்
வாய்ப்பட்டது  எனவருந்துவர்  அயலார்; ஆனால் சேர்ப்பன் உண்டு சென்றதால் பொலி விழந்த என்
நலனுக்காக யாரும் வருந்தவில்லை என்பது உரிப்பொருள் இதுஇரங்கலாதலின் நெய்தலாயிற்று.

15. அகத் - 45.