பக்கம் எண் :

42தொல்காப்பியம் - உரைவளம்

(இ-ள்) முதல்  எனப்படுவது  நிலம்  பொழுது  இரண்டின்  இயல்பு - முதல்  என்று  சொல்லப்படுவது
நிலமும்  காலமும்  ஆகிய   அவ்விரண்டினது   இயற்கை,  என மொழிப  இயல்பு உணர்ந்தோர் - என்று
சொல்லுவர் உலகின் இயல்பு உணர்ந்தோர்,
  

இயற்கை  என்பதனால்  செய்து  கோடல்  பெறாமை  அறிந்து  கொள்க.  நிலம் என்பதனால் பொருள்
தோற்றுதற்கு இடமாகிய ஐம்பெரும் பூதமும் கொள்க.
  

நச்சினார்க்கினியர்
  

4. முதலெனப் ..................................... தோரே.
  

இது  நிறுத்த   முறையானே1  முதல்   உணர்த்துவான்  அதன்  பகுதியும்  அவற்றுட் சிறப்புடையனவும்
இல்லனவுங் கூறுகின்றது.
  

இதன் பொருள்:- முதல்  எனப்படுவது  -  முதலென்று  சிறப்பித்துக்  கூறப்படுவது,  நிலம்   பொழுது
இரண்டின்  இயல்பு  என  மொழிப  -  நிலனும்  பொழுதும்   என்னும்   இரண்டினது  இயற்கை  நிலனும்
இயற்கைப்  பொழுதுமென்று  கூறுப,  இயல்பு  உணர்ந்தோரே -  இடமுங்  காலமும்  இயல்பாக  உணர்ந்த
ஆசிரியர் என்றவாறு.
  

இயற்கையெனவே     செயற்கை  நிலனுஞ்  செயற்கைப்  பொழுதும்  உளவாயிற்று.  மேற் ‘பாத்திய’ (2)
நான்கு  நிலனும் பொழுதும் முன்னர்  அறியப்படும்.2 முதல்  இயற்கைய வென்ற   தனாற்  கருப்பொருளும்
உரிப்பொருளும் இயற்கையுஞ் செயற்
  


1. முன் சூத்திரத்து முதல் கரு உரிப் பொருள் என வரிசைப் படுத்திய முறை.

2. சூ. 12-15.