பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.443

கையுமாகிச்   சிறப்புஞ்3  சிறப்பின்மையும்4  உடையவாய்ச்  சிறுவரவினவென   மயக்கவகையாற்   கூறுமாறு
மேலே5  கொள்க.  இனி  நிலத்தொடு  காலத்தினையும்  முதலென்றலிற்   காலம்பெற்று6   நிலம்   பொறத
பாலைக்கும்   அக்காலமே   முதலாக    அக்காலத்து    நிகழுங்   கருப்பொருளுங்7    கொள்க.    அது
முன்னர்க்காட்டிய உதாரணத்துட் காண்க.
  

பாரதியார்.
  

4. முதலெனப்...................... உணர்ந்தோரே.
  

கருத்து:-    முன்னைச்     சூத்திரங்கூறும்   மூன்றனுள்   முதற்   பொருளினைத்தென   இச்சூத்திரம்
விளக்குகிறது.
  

பொருள்:-  முதலெனப்படுவது  -  முதற்பொருளென்று   கூறப்படுவது;  நிலம்  பொழுதிரண்டினியல்பு -
நிலமும்  பொழுதுமாகிய  இரண்டினியல்பாம்;   என   மொழிப   இயல்புணர்ந்தோரே - என்று சொல்லுவார்
பொருளிலக்கணம் உணர்ந்த புலவர்.
  

குறிப்பு:- இதில் ஈற்றேகாரம் அசைநிலை.
  

சிவலிங்கனார்
  

உலகியல்பும்  செய்யுள்   இயல்பும்   உணர்ந்தவர்   முதற்பொருள்  என்று சிறப்பித்துச் சொல்லப்படுவன
நிலமும் காலமும் ஆகிய இரண்டின் இயற்கை நிலைகளே என்று சொல்வர்.
  


3. சிறப்பாவது அவ்வந் நிலக் கருப்பொருள் அவ்வத்திணைப் பாடலில் வருவது.

4. சிறப்பின்மையாவது   ஒரு    நிலக்  கருப்  பொருள்  தன்  தன்  நிலத்திணைப்  பாடலில்  வராமல்
வேற்றுத்திணைப்பாடலில் வருவது.

5. சூ 12-19 மேலே கொள்க - மேற் சூத்திரங்களில் உணர்ந்து கொள்க.

6. காலம் - முதுவேனிற்காலமும் நண்பகலும்.

7. கருப்பொருள் - உலரியமரம் நீரற்ற சுனை முதலியன.