பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.547

“கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே”

(குறுந்-3)
 

என்றவழி மைவரை உலகிற்குக் குறிஞ்சிப்பூச் சிறந்தது ஆகலானும்,
  

“இறாஅல் அருந்திய சிறுசிரல் மருதின்
தாழ்சினை உறங்குந் தண்துறை ஊர”

(அகநா - 286)
 

என்றவழி, தீம்புனல் உலகிற்கு மருது சிறந்தமையானும்.
  

“பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீன் இருங்கழி ஓதம் மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்”

(குறுந் 9)
 

என்றவழிப்   பெருமணல்  உலகிற்கு  நெய்தல்  சிறந்தமையானும்  இந்நிலங்களை   இவ்வாறு   குறியிட்டார்
என்று கொள்ளப்படும்.
  

பாலை   என்பதற்கு   நிலம்   இன்றேனும், வேனிற்  காலம்  பற்றி  வருதலின்  அக்காலத்துத் தளிரும்
சினையும்  வாடுதலின்றி  நிற்பது  பாலை என்பதோர்  மரம்  உண்டாகலின்,  அச்சிறப்பு  நோக்கிப்  பாலை
என்று  குறியிட்டார். கைக்கிளை பெருந்திணை  என்பனவற்றிற்கு  நிலமும்  காலமும்,  பகுத்து  ஓதாமையின்
இவ்வாறன்றிப் பிறிதோர் காரணத்தினாற் குறியிட்டார்.7
  

நச்சினார்க்கினியர்
  

5. மாயோன் மேய.....................படுமே.
  

இது ‘நடுவணது’ (2) ஒழிந்த நான்கானும் அவ்‘வைய‘த்தைப் பகுக்கின்றது.
  

இதன் பொருள்:- மாயோன்  மேய  காடு  உறை உலகமும்-கடல் வண்ணன் காதலித்த காடுறையுலகமும்,
சேயோன்  மேய  மைவரை உலகமும் -  செங்கேழ்  முருகன்  காதலித்த  வான்  தங்கிய வரை சூழலகமும்,
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்-
  


7. முதற் சூத்திரவுரையில் காரணம் காண்க.