11

xi
  

ஒரு  நிலத்திற்குரிய  பூவும்  புள்ளும்  அந்த நிலத்திற்கு வராவிட்டாலும் வந்த நிலத்திற்குப் பயன்பெற்று
வரும். அவ்வாறு மயங்கி வருவது திணை மயக்கமாகும் (21).
  

பெயர்
  

ஒவ்வொரு     ஒழுக்கத்தோடும்  பொருந்திய  முல்லை முதலிய நிலங்களில் வாழும் அகத்திணைக்குரிய
மக்கட் பெயர்கள்,   அந்தந்த  நிலத்துப்  பெயர்ப்பெயரையும்  அந்நிலத்து மக்களின் தொழிலால் அமையும்
வினையின் பெயரையும் கொண்டு அமையும் (22).
  

ஆயர்,    வேட்டுவர்  என்பன  ஆண்பால் சுட்டும் முல்லை நில மக்களின் திணை நிலைப் பெயராகும்.
அந்நிலத்து  அகத்திணைக்குரியவர்க்கும்   உரியதாகும்  (23).   ஏனை  நிலத்து  மக்களையும்  ஆய்கையில்
அந்நிலங்களுக்கும்  அவ்வகையாகவே  பெயர்கள்  அமைகின்றன.  அவை  வருமாறு:  குறிஞ்சிக்கு,  மக்கட்
பெயர்  குறவன்,  குறத்தி  என்பன;  தலைமக்கட்   பெயர்  மலை  நாடன்,  வெற்பன்  என்பன; பாலைக்கு
மக்கட்  பெயர்  எயினர்,  எயிற்றியர் என்பன;  தலைமக்கட்பெயர்  மீளி,  விடலை  என்பன;  மருதத்திற்கு
மக்கட்  பெயர்;  உழவர், உழத்தியர் என்பன;  தலைமக்கட்  பெயர்  ஊரன்,  மகிழ்நன் என்பன; நெய்தற்கு
மக்கட்பெயர்  நுளையர்,  நுனைச்சியர் என்பன;  தலை,  மக்கட்பெயர்  சேர்ப்பன்,  துறைவன்,  கொண்கன்
என்பன (24)
  

கூற்று
  

அகம்   என்ற  பாங்கில்  தலைவன், தலைவி, தோழி, செவிலி, நற்றாய், கண்டோர் போன்றவர்கள் பங்கு
இடம்    பெற்றுள்ளது.     இவர்களின்     செயற்பாடும்   கூற்றும்  ஒரு  வரையறுக்கப்பட்ட  எல்லையில்
அமைகின்றன.  அவர்களின்  வரையறை  என்பது.  காதல்    மாந்தர்க்கும்    மற்றப்   பாத்திரங்களுக்கும்
இடையேயுள்ள  உறவு  நெருக்கத்தை  மையமிட்டதாகும்.  அந்தவகையில்  தலைமகன்,   தோழி,   நற்றாய்,
கண்டோர் போன்றவர் கூற்றுகள் இடம் பெறுகின்றன.
  

தலைவன் கூற்று
  

‘ஒன்றாத்  தமரினும்  பருவத்துஞ்   சுரத்தும்  ஒன்றிய  மொழியொடு  வலிப்பினும் விடுப்பினும்’ என்பது
முதல், ‘பிரிந்தோள் குறுகி இரத்தலும் தெளித்தலும்’ பதினேழு நிலைகளில்