இனி, குறிஞ்சி நிலத்திற்குக் குறவர் முதலியோர் குழீஇ வெறியயர்தற்கு வேண்டும் பொருள்கொண்டு வெறியயர்பவாகலின், ஆண்டு முருகன் வெளிப்படுமென்றார். |
அது, ‘அணங்குடை நெடுவரை’ என்னும் அகப்பாட்டினுள் |
“படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை நெடுவேட் பேணத் தணிகுவ ளிவள்” |
(அகம்-22) |
எனவரும். சூரர மகளிரொ டுற்ற சூளே என்புழிச் சூரர மகளிர் அதன் வகை. |
இனி ஊடலுங் கூடலுமாகி காமச்சிறப்பு நிகழ்தற்கு மருத நிலத்திற்குத் தெய்வமாக ‘ஆடலும் பாடலு மூடலுமுணர்தலும்’ உள்ளிட்ட இன்ப விளையாட்டு இனிது நுகரும் இமையோர்க்கு இன்குரலெழிலிக்கும்1 இறைவனாகிய இந்திரனை ஆண்டையோர் விழவு செய்து அழைத்தலின் அவன் வெளிப்படுமென்றார். |
அது |
“வையைப் புதுப்புன லாடத் தவிர்ந்தமை தெய்வத்திற் றேற்றித் தெளிக்கு” |
(கலி-98) |
என இந்திரனைத் தெய்வமென்றதனானும், இந்திர விழவூரெடுத்த காதையானும் உணர்க. |
இனி நெய்தனிலத்தில் நுளையர்க்கு வளைவளந்தப்பின் அம்மகளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக் கோடு நட்டுப் பரவுக் கடன் கொடுத்தலின், ஆண்டு வருணன் வெளிப்படு மென்றார். அவை, |
“சினைச் சுறவின் கோடு நட்டு மனைச் சேர்த்திய வல்லணங்கினான்” |
(பட்டின-86-87) |
எனவும், |
“கொடுஞ்சுழிப் புகா அர்த் தெய்வ நோக்கி” |
(அகம்-110) |
எனவும், |
1. இன்குரல்எழிலி - இடியுடன் கூடிய மேகம். |