பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.551

யாது     இல்லிருந்து  நல்லறஞ்  செய்தல்  மகளிரது  இயற்கை  முல்லை2 யாதலின் அது முற்கூறப்பட்டது.
எனவே,   முல்லையென்ற   சொற்குப்   பொருள்   இருத்தலாயிற்று. முல்லை சான்ற முல்லையம் புறவின்3
என்பவாகலின். புணர்தலின்றி  இல்லறம்  நிகழாமையிற்  புணர்தற் பொருட்டாகிய  குறிஞ்சியை  அதன் பின்
வைத்தார்.   இதற்கு   தாரணம்   இறந்தது.   கருங்காற்  குறிஞ்சி  சான்றவெற்  பணிந்து’  என்பது  கரு.4
புணர்ச்சியின்  பின்   ஊடல்   நிகழ்தலின்   அதன்பின்   மருதத்தை   வைத்தார்.  ‘மருதஞ்சான்ற மருதத்
தண்பனை’  என்புழி   மருதமென்றது   ஊடியுங்   கூடியும்  போகம் நுகர்தலை. பரத்தையிற் பிரிவுபோலப்
பிரிவொப்புமை  நோக்கி  நெய்தலை  ஈற்றின்  கண் வைத்தார் நெய்தற் பறையாவது இரங்கற் பறையாதலின்,
நெய்தல் இரக்கமாம்.
  

“ஐதக லல்குன் மகளிர்
நெய்தல் கேளன்மார் நெடுங்கடை யானே”
  

(புறம்-389)
  

என வரும்.
  

இனி      இவ்வாறன்றி   முல்லை   முதலிய   பூவாற்   பெயர்  பெற்றன  இவ்வொழுக்கங்களெனின்,
அவ்வந்நிலங்கட்கு    ஏனைப்பூக்களும்    உரியவாகலின்    அவற்றாற்   பெயர்  கூறலும்  உரியவெனக்
கடாவுவாற்கு விடையின்மை உணர்க.
  

இதனானே   நடுவுநிலைத்திணை  யொழிந்த  நான்கற்கும்  பெயரும்  முறையுங்  கூறினார். இந்நான்கும்
உரிப்பொருளாதல் ‘புணர்தல் பிரிதல்’ (14) என்புழிக் கூறுதும் கருப்பொருளாகிய  


2. முல்லை  -   கற்பு - முல்லை  கற்புக்கடையாளம் - கற்பை உறுதிப்படுத்துவது ஆற்றியிருத்தலாதலின்
இருத்தல் முல்லை எனப்பட்டது.
  

3. இருத்தல் அமைந்த முல்லைக்காடு சிறுபாண் 169.
  

4. கரு   -   காரணம்    கருங்காற்   குறிஞ்சி   என்ற   அடையால்   குறிஞ்சி  என்றது  புணர்தல்
ஒழுக்கத்தைக்குறியாது எனினும் கருங்கால் என்றது வாளா நின்றது எனின் பொருந்தும்.