பக்கம் எண் :

52தொல்காப்பியம் - உரைவளம்

தெய்வத்தை  முதற்பொருளோடு  கூறியது  அவை   ‘வந்த  நிலத்தின் பயத்தவாய்’ (19) மயங்குமாறு போல
மயங்காது    இதுவே    யென்றற்கும்,    கருப்பொருளுடைத்    தெனப்பட்ட   பாலைக்குத்  தெய்வத்தை
விலக்குதற்கும்1 என்றுணர்க.
  

உதாரணம் :-
  

“வன்புலக் காட்டுநாட் டதுவே”  

(நற்றிணை - 59)
 

எனவும்,
  

“இறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற்
...................கன்மிசைச் சிறுநெறி”

(அகம்-128)
 

எனவும்,
 

“அவ்வய னண்ணிய வளங்கே ழூரனைப்
புலத்தலுங் கூடுமோ தோழி”

(அகம்-26)
 

எனவும்,
  

“கானலுங் கழறாது...................மொழியாது 

(அகம் - 170)
 

எனவும் நால்வகை யொழுக்கத்திற்கு நால்வகை நிலனும் உரியவாயினவாறு காண்க.
  

பாரதியார்
  

5. மாயோன்..............................படுமே.
  

கருத்து :-  இது மேலே  இரண்டொரு  சூத்திரத்துட்  கூறியாங்கு,  நானிலம் முறையே நான்குதிணைக்கு
உரிமை பெறுமுறை கூறி, நில முதற்பொருள் திணையுரிப் பொருளொ டியையுமாறு விளக்குகிறது.
  

பொருள் :- மாயோன்மேய   காடுறையுலகமும் - கருநிறக்கடவுள் உறைவிடமாகிய நிரைமேயும் காட்டு
நிலப்பகுதியும்;    சேயோன்மேய     மைவரையுலகமும்    -    செவ்வேளுரையும்    மஞ்சு    தவழும்
மலைநிலப்பகுதியும்;   வேந்தன்மேய  தீம்புனலுலகமும்  இந்திரனுக்கிருப்பிடமாகிய  இனி  புனல்நிறை
நிலப்பகுதியும்;


1. பாலைக்கு நிலம் இல்லையாதலின் தெய்வமும் இல்லை என்பது இவர் கருத்துப் போலும்.