பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.6, 757

திணை     என்றாற்போல1 இது மேலனவற்றிற்கும் ஒக்கும்2  இக்காலங்கட்கு  விதந்து  ஓர் பெயர் கூறாது.
வாளா  கூறினார்.  அப்பெயர்  உலக  வழக்காய்   அப்பொருள்  உணர  நிற்றலின். காலவுரிமை3 எய்திய
ஞாயிற்றுக்கு   உரிய   சிங்கவோரை   முதலாகத்     தண்மதிக்கு  உரிய   கற்கடகவோரையீறாக  வந்து
முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின் அதனை இம்முறையானே  அறுவகைப்படுத்து  இரண்டு  திங்கள் ஒரு
காலமாக்கினார்.4  இனி  ஒரு  நாளினைப்  படுசுடாமையந்5   தொடங்கி  மாலையெனவும்,  அதன்  பின்
இடையாமமெனவும்    அதன்பின்    வைகறையெனவும்,   அதன்   பின்   காலையெனவும்   அதன்பின்
நண்பகலெனவும், அதன்பின்


1. முதல்கரு...  என்றாற்போல - விளக்கம். ஒரு  திணை  என்பது  முதல்கரு உரி என்ற மூன்றும். ஆம்
இச்சூத்திரத்தில்  காரும்  மாலையும் முல்லைத் திணையாம் என்று பொழுதை மட்டும் திணையென்றார்
இது  எது  போல்வது எனின், ஆண்டு பெண் பலர் என்பன மூன்றும் உயர்திணை எனப்படுமாயினும்
வந்தான் என ஆண்பாலை மட்டில் குறித்தால் அதுவும் உயர்திணை எனப்படுதல் போலாம் என்க.
  

2. மேல்வரும் குறிஞ்சி முதலியவற்றுக்கும் ஓக்கும்.
  

3. கார்காலமாவது  ஆவணி  புரட்டாசித்  திங்கள்  என  விதந்து  கூறாமல் கார் என்றே கூறியது ஏன்
எனின் கார்காலம் என்றாலே அத்திங்கள்களை உலகத்தாரால் உணரப்பட்டு நிற்கும் ஆதலின்.
  

4. காலவுரிமை -  காலமாக்கினார்:  காலத்தைப்  பாகுபடுத்த  ஞாயிற்றை அடிப்படையாகக் கொள்ளலின்
ஞாயிறு  காலவுரிமையுடையதாயிற்று  ஞாயிற்றுக்குரிய மாதம்  ஆவணி  திங்களுக்குரிய  மாதம் ஆடி.
ஆவணி  முதலாக  ஆடிவரையுள்ள  12  மாதங்களை ஓர்யாண்டு  என  வரையறுத்தனர்.  அவற்றை
இவ்விரண்டுமாதங்களைக் கார் முதலிய ஆறுபருவங்களாக வகுத்தனர்.
  

5. படுசுர் அமையம் - சுடர்படு அமையம் என்க. ஞாயிறு மறையும் நேரம்.