12 

xii
  

தலைவன்   கூற்று   நிகழ்கின்றன.   களவு,   உடன்போக்கு,   கற்பு,   பரத்தை  போன்ற  பலநிலைகளில்
தலைவனின் கூற்றைப் பாகுபடுத்திக்கூறியுள்ளது (44).
  

தோழிகூற்று
  

‘தலைவன்  விழும  நிலையெடுத்துரைத்தல்’  என்பது  முதல்  ‘நோய் மிகப் பெருகித்தன் நெஞ்சுகலுழ்ந்
தோளை  அழிந்தது  களையென  மொழிந்தது  கூறி  வன்புறை  நெருங்கி  வந்ததன்  திறத்தொடு’ என்பது
ஈறாக,  ஆறு  கூற்றுகள்  நிகழ்கின்றன.  தலைவன்   தலைவியின்   அன்பு   வாழ்க்கை   அல்லது காதல்
வாழ்க்கைக்குத்  துணையாவதும்,  தேவையானபோது  இடித்துரைக்கின்ற   தன்மையும்  தோழிக்கு   உண்டு
(42).
  

நற்றாய் கூற்று
  

நற்றாய்,     தனக்கும்   தலைமகனுக்கும்  தலைமகளுக்குமுள்ள    உறவு    முறைகளைக்   குறித்தும்,
நிமித்தங்களைக்  (பல்லி  போன்றன)  குறித்தும்,  அவர்க்கு  ஏற்படும்   நன்மை   தீமைகளைக்  குறித்தும்
தோழியிடத்தும்  கண்டோரிடத்தும்  புலம்புதல்  போன்றவை,   நற்றாயின்   கூற்றாக  அமைகின்றன  (39).
நற்றாயின்  கூற்று அகத்திணையோடு  தொடர்புடைய  வேறு  எந்த  இயலிலும் இடம் பெறவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
  

கண்டோர் கூற்று
  

தலைமக்கள்     உடன்  போக்கில்  கண்டோர்  கூற்று  நிகழ்கின்றது. அவர், தலைமக்கள் செல்லுகின்ற
பாதையின்  தன்மையை  எடுத்துரைக்கின்றனர்.  அப்பாதையில்  எழும்  சிக்கல்கள்  அல்லது இன்னல்களை
அவர்கள்  எதிர்கொள்ளும்   முறையை  எடுத்துரைக்கின்றனர்.  அவர்  செல்லும்  வழியிலுள்ள  ஊரையும்
அவ்வூராரின்  சிறப்பையும்  எடுத்தியம்புதல்; அன்பு  கொண்ட  அத்தலைமக்களின்  தன்மையைக் கூறுதல்;
அம்மக்களைத்  தேடிவரும்  செவிலியின்  மன  நிலையைக்   கண்டு  அவர்களைத்  தடுத்தலும்;  அல்லது
விடுத்தலும்   மேலும்   உடன்போக்கிலும்,   உடன்அழைத்து   வருதல்   சூழலிலும்    கண்டோர்  கூற்று
நிகழுகின்றது (43).
  

மேற்கண்ட    பகுதிகளில்   தலைவன்,   தோழி,   நற்றாய்,   கண்டோர்   போன்றவரின்   கூற்றுகள்
சுட்டப்பட்டுள்ளன, ஆனால்,