பக்கம் எண் :

60தொல்காப்பியம் - உரைவளம்

யெவன்கொல் வாழி தோழி மயங்கி
யின்ன மாகவு நன்னர் நெஞ்ச
மென்னோடு நின்னொடுஞ் சூழாது கைம்மிக்
கிறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற்
குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்
கானக நாடன் வரூஉம் யானைக்
கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி
மாரி வானந் தலைஇ நீர்வார்
பிட்டருங் கண்ண படுகுழி யியவி
னிருளிடை மதிப்புழி நோக்கியவர்
தளரடி தாங்கிய சென்ற தின்றே.”
 

(அகம்-128)
 

இரவுக்குறிக்கட் சிறைப்புறமாகத் தோழிக்கு உரைப்பாளாக உரைத்தது.
  

இது குறிஞ்சிக்குக் கூதிரும் யாமமும் வந்தது8
  

நிலனும்    பொழுதும் முதலென்றமையிற் கார் முதலாதல்  வேண்டும்;  வேண்டவே, அதற்கிடையின்றிக்
கூறிய   மாலையும்  அதன்  சினையாமாதலின்,  கார்காலத்து மாலையென்பது பெற்றாம்.9 இது கூதிர் யாமம்
என்பதற்கும் ஒக்கும்.
  

பாரதியார்.
  

6. காரு மாலை......................புலவர்
  

கருத்து :-  இது  முதல்  101  வரை  ஆறு  சூத்திரங்கள்  கால முதற்பொருள் திணையுரிப் பொருளுக்கு
உரிமை கொள்ளுமாறு கூறுகிறது.


8. தலைவி கூற்று.  ‘தோழீ’  யாம்  வருந்தி  இங்கிருக்கவும் நம் நெஞ்சம் இரவில் மாரிவானம் பொழிய
நீர்நிறைந்த  படுகுழிகளைத்  தலைவன்  கடக்கும் அவள் கால்களைத் தாங்கும் பொருட்டு அவனிடம்
சென்றது  என்னே!”-  இது உரிப்பொருள்  மாரிவானம் தலைஇ  என்பது கூதிர் காலத்தைக் குறிப்பது
யாமம் சிறுபொழுது.
  

9. மாலை   எல்லாப்  பருவத்தும்   வருவதாயினும்   காரும்  மாலையும்  எனச்  சேர்த்துக்  கூறலின்
கார்காலத்து மாலை எனக்கொள்க. பிற காலங்களிலும் அவ்வாறே கொள்க.