பொருள் :- காரும் மாலையும் முல்லை - கார்காலமாகிய பெரும் பொழுதும், மாலையாகிய சிறுபொழுதும் முல்லைத்திணைக்குச் சிறந்தன; குறிஞ்சி கூதிர் யாமம் - கூதிரென்னும் பின்பெயர் சிறுபொழுதும் குறிஞ்சித் திணைக்குச் சிறந்தன; என்மனார் புலவர் - என்று கூறுவர் புலவர். | குறிப்பு :- ஓராண்டு - இளவேனில், முதிர்வேனில், கார் கூதிர், முன்பனி, பின்பனி, என இவ்விரண்டு திங்கள் கொண்ட பருவம் அல்லது பெரும் பொழுது ஆறாகப் பகுக்கப்படும் இதில் கார் காலம் முன்பெயற்காலமான ஆவணியும் புரட்டாசியும் எனத் திங்களிரண்டுகொண்ட பெரும் பொழுதாகும். | பகல்-விடியல் அதாவது காலை, நண்பகல் எற்பாடு எனவும், இரவு - மாலை, யாமம், வைகறை யெனவும், பகல் மூன்று இரவு மூன்றாக ஆறு சிறுபொழுதுகள் கூடியது ஒரு நாளாகும், ஈண்டு ‘யாமம்’ என்பது நள்ளிரவு (இரவின் நடுக்கூறு) குறிக்கும் தமிழ்ச்சொல்; ஏழரை நாழிகைகொண்ட நாளின் எட்டிலொரு பகுதி சுட்டும் சாமம், வடசொல், இவற்றை ஒன்றெனக்கருதி மயங்குதல் தவறு. | காரு மாலையும் முல்லைக்குச் சிறத்தலுக்குச் செய்யுள்:- | “முகை முற்றினவே முல்லை. முல்லையொடு தகை முற்றினவே தண்கார், வியன்புலம் வாலிழை, நெகிழ்த்தோர் வாரார், மாலை வந்தன்றென் மாணலங்குறித்தே.” (குறுந்-188) இதில், குறித்த பருவத்தில் வாராத் தலைவன் பிரிவால் வருந்தி இருக்கும் தலைவிக்குக் காரும் மாலையும் துன்பம் தருதல் கூறுதலால் முல்லைக்குரிய பருவம் பொழுதும் ஒருங்குற்ற பெற்றியறிக. | “பழ மழை கலித்த ... .... .... ....... ..... ..... ...... ...... ...... .... ...... வண்டுசூழ் மாலையும் வாரார் கண்டிசிற் றோழி, பொருட் பிரிந்தோரே.” | (குறுந்-220) | என்பது மிதுவே. |
|
|