இடைச் சொல்லான் அன்றிப் பெயரான் எண்ணப்படும் செவ்வெண்ணின் இறுதியும், ஏயின் ஆகிய எண்ணின் இறுதியும்-ஏகாரத்தான் வரும் எண்ணுச் சொற்களின் இறுதியும், யாவயின் வரினும்தொகையின்று இயலா-யாதானும் ஓரிடத்துவரினும் தொகையின்றி நடவா, எ-று. உ-ம் : நிலனெனா நீரெனா இரண்டும், நிலனென்றா நீரென்றா இரண்டும், நிலம் நீரென இரண்டும், நிலனே நீரேயென இரண்டும் எனவரும். இறுதியும் என்றது அவ்வெண்ணுக்கண் இறுதிதொகை பெறும் என்பதற்கு. பெயர்க்குரி மரபின என்றது மற்றைய எல்லாம் இடைச்சொல் செவ்வெண்ணுப் பெயர். தம்மாலே ஆம் என்றற்கு. ஆதி. மேற்சொன்ன எனா என்றா எண்ணுப் பொருளும் பெயர்ச் செவ்வெண்ணும் எண்ணுப் பொருளில் வரும் ஏகாரமும் யாண்டும் தம்மில் முடியா, தொடர்ந்து வரும் மொழியிலன்றி நிறைவு பெறா. பண் எனாப் பரிசெனா நிலமெனாப் பலவகையில் உதவி செய்தேன். பரிசும் பொருளும் என்றாச் சீரும் சிறப்பும் என்றா எத்தனை வகையுதவி. மானே மயிலே மலையே மரமே என்துன்பத்தை எடுத்து உரையுங்கள். சிவ. ஆதித்தர் தொகை என்பதற்கு எண்ணின் தொகை எனப்பொருள் கொள்ளாமல் ‘தொடர்ந்து வரும் மொழி’ எனப் பொருள்கொண்டார். இது சூத்திரப்போக்குக்குப் பொருந்துவதன்று. ‘பண்எனாப் பரிசெனா நிலமெனா’ எனயாரும் நிறுத்தமாட்டார். ஏதேனும் தொடர் கொண்டே முடிப்பர். பால. கருத்து :- தொகை பெற்று வரும் எண்ணிடைச் சொற்கள் இவையெனக் கூறுகின்றன. பொருள் :- மேற்கூறிய எனா,என்றா என்பவற்றான் வரும் என்னின் இறுதியும் பெயர்க்கு உரியவாய் இம்மரபின் வரும் |