பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.863

(இ-ள்) பனிஎதிர் பருவமும் உரித்து எனமொழிப முன் பனிக்காலமும் உரித்தென்று சொல்லுவர்.1
 

இதனைக்  கூதிர்க்  காலத்தோடு  ஒருங்கு  கூறாமையின், அத்துணைச் சிறப்பிற்று அன்றெனக் கொள்க.
குறிஞ்சி என்றது அதிகாரத்தான் வந்தது.
  

முன்பனிக்   காலமாவது   மார்கழித்  திங்களும்  தைத்திங்களும்.  உம்மை  இறந்தது  தழீஇய2  எச்ச
உம்மை.

(8)
 

நச்சினார்க்கினியர்
  

8. பனியெதிர்..............................மொழிப.
  

இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறியது; முற்கூறிய குறிஞ்சிக்கு முன்பனியும் உரித்தென்றலின்.
  

இதன் பொருள் :- பனிஎதிர் பருவமும்  உரித்துஎன மொழிப - பனி  முற்பட்ட பருவமுங்  குறிஞ்சிக்கு
உரித்தென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
  

எதிர்தலென்பது முன்னாதல்; எனவே, முன்பனியாயிற்று. அது ஞாயிறுபட்ட அந்திக்கண் வரும்
  

உரித்தென்றதனாற் கூதிர்பெற்ற யாமமும் முன்பனி பெற்றுவரும் எனக்கொள்க.
 

உதாரணம்:
  

“பனியடூஉ நின்ற பானாட் கங்குற்
றமியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய வலைத்தி முரணில் காலை.”

(அகம்-124)
 

என முன்பனியாமங் குறிஞ்சிக் கண் வந்தது.


1. குறிஞ்சிக்கு உரித்தென்று சொல்லுவர்.
  

2. முன் சூத்திரத்துக்கூறிய கூதிர்ப் பருவத்தைத்தழுவியது.