பக்கம் எண் :

68தொல்காப்பியம் - உரைவளம்

என மருதத்திற்கு வைகறை வந்தது.     (கலி-66)
  

‘விரிகதிர் மண்டிலம்3 என்னும் மருதக்கலியுள்,

“தணந்தனை யெனக் கேட்டுத் தவறோர தெமக்குநின்
குணங்களைப் பாராட்டுந் தோழன்வந் தீயான்கொல்
கணங்குழை நல்லவர் கதுப்பற லணைத் துஞ்சி
யணங்குபோற் கமழுநின் னலர்மார்பு காணிய”

(கலி-71)
  

என மருதத்துக் காலை4 வந்தது.
  

‘காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி’ என்பதும் அது.
  

இனி     வெஞ்சுடர் வெப்பந் தீரத்  தண்ணறுஞ்  சோலை  தாழ்ந்து  நீழற் செய்யவும், தண்பதம்பட்ட
தென்கழி மேய்ந்து பல்வேறு வகைப்பட்ட  புள்ளெல்லாங்  குடம்பை  நோக்கி உடங்கு பெயரவும், புன்னை
முதலிய  பூவினாற்றம்  முன்னின்று  கஞற்றவும்,  நெடுந்திரை  யழுவத்து  நிலாக்கதிர்  பரப்பவும்,  காதல்
கைமிக்குக்   கடற்கானுங்   கானற்கானும்   நிறைகடந்து   வேட்கை   புலப்பட  உரைத்தலின்  ஆண்டுக்
காமக்குறிப்பு வெளிப்பட்டு இரங்கற்பொருள் சிறத்தலின் எற்பாடு நெய்தற்கு வந்தது.
  

“நெடுவேண் மார்பி லாரம் போலச்
செவ்வாய் வானந் தீண்டி மீனருந்து
பைங்காற் கொக்கின் நிரைபறை யுகப்ப
வெல்லை பைபையக் கழிப்பிக் குடவயிற்
கல்சேர்ந் தன்றே பல்கதிர் ஞாயிறு
மதரெழின் மழைக்கண் கலுழ விவளே
பெருநா ணணிந்த சிறுமென் சாயன்
மாணலஞ் சிதைய வேங்கி யானா
தழறொடங் கினளே பெரும வதனாற்


4. நின்  அலர்  மார்பு  காணிய  வந்தீயான்  கொல்  என்றதில்   அவள்  மார்பு நல்லவர் கதுப்பறல்
அணைத்துஞ்சிக்  கமழும்  அவர்  மார்பு  எனப்பட்டமையால் தூங்கி எழுந்த  காலம் குறிக்கப்பட்டு
அதுகாலை என்பதைப் புலப்படுத்தியது என்க.