கழிச்சுறா வெறிந்த புட்டா ளத்திரி நெடுநீ ரிருங்கழிப் பரிமெலிந் தகைஇ வல்வில் விளையரொ டெல்லிச் செல்லாது சேர்ந்தனை செவினே சிதைகுவ துண்டோ பெண்ணை யோங்கிய வெண்மணற் படப்பை யன்றி லகவு மாங்கட் சிறுகுர னெய்தலெம் பெருங்கழி நாட்டே.’ |
(அக-120) |
பகற்குறிக்கண் இடத்துய்த்துத் தலைவனை எதிர்ப்பட்டு உரைத்தது. |
நெய்தற்கு எற்பாடு வந்தது5 |
’கானன் மாலைக் கழிப்பூக் கூம்ப’ என்பதனுள் மாலையும் வந்தது. கலியுள் மாலைக்காலம் நெய்தலின்கண் வந்தவாறு காண்க. இதுமேல் ‘நிலனொருங்கு மயங்குதலின்று’ (12) என்பதனாற் பெறுதும். |
இவற்றிற்கு அறுவகை இருதுவும் உரிய வென்பதன்றிக் காரும் இளவேனிலும் வேனிலும் பெரும் பொழுதாகக்கொள்ப. என்றற்குப் பொருள்பெறத் தோன்றும் என்றார். |
இனி நெய்தற்கு ஒழிந்த மூன்று காலமும் பற்றிவரச் சான்றோர் செய்யுட் செய்திலர்: அக்காலத்துத் தலைவி புறம் போந்து விளையாடாமையின் அங்ஙனம் வந்த செய்யுளுளவேல் அவற்றையுங் கொள்க. |
“கழனி மாஅத்து வினைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூர னெம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் கையுங் காலுந் தூக்கத் தூக்கு மாடிப் பாவை போல மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே.” |
(குறு-8) |
இது குறுந்தொகை6. |
5. ஞாயிறு எல்(வெயில்)லைப் பைப்பயக்கழிப்பிகுட வரைக்கல் சேர்ந்தன்று என்பதால் எற்பாடு கொள்க. |
6. இதில் பொழுது கூறப்படவில்லை. |