வைகறையும் விடியலும் முன்னும் பின்னுமாக வரும் இரு வேறு சிறுபொழுதுகளே யென்பது மதுரைக் காஞ்சியடிகளாலினிது விளங்கும், |
“..............................................இல்லோர் நயந்த காதலர் கவவுப்பிணித் துஞ்சிப் புலர்ந்துவிடி விடியல் எய்த” (662, 663, 664) |
என்ற அடிகளில் “இருள் மாய்ந்து கதிர் விரியும்” காலையை விடியலென்றும் பிறகு “இரவுத்தலைப் பெயரும் ஏமவைகறை” என்று அதேபாட்டில் 686 - ஆம் வரியில் வைகறையை விடியலினின்றும் வேறு பிரித்து அது இரவுத் தலைப் பெயரும் ஏமஞ்செய் காலமென்றும், மாங்குடி மருதனார் கூறுதலால் அது வலிபெறுவதாகும். அன்றியும் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் தாம் பாடிய மலைபடு கடாத்தில், |
“வேய்ப்பயில் விளையுட் டேக்கட் டேறல் குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப் பழஞ்செருக் குற்ற அனந்தல் தீர” |
171, 172, 173-வது அடிகளில் வைகறைப் பொழுதைக் கூறிப் பிறகு அடி 195, 196-இல் |
...................................நள்ளிருளலரி |
விரிந்த விடியல் வைகினிர் கழி மின்” என்று இருள் புலர்ந்து பகல் மலர்ந்து கதிர் முரிந்த விடியற் காலத்தை வேறு பிரித்தோதினர். இஃது, இவ்விரு பொழுதையும் இவ்வாறே வெவ்வேறாக மதுரைக் காஞ்சியில் விளக்கிய மாங்குடி மருதனார் கொள்கையே அடிப்பட்ட தமிழ் வழக்கென்பதனை வெள்ளிடை மலைபோல் விளக்குவதாகும். ஈண்டுப் பெருங்கௌசிகனார் “நறவு மகிழ்ந்து வைகறைக் காலத்தே அனந்தல் தீர கடமான் கொழுங்குரையும்................பயினிணப் பிளவை........... தடியொடு விரைஇ.......................... குறமகளாக்கிய வாலவிழ்வல்சி அகமலியு வகையார்வமொடளைஇ ...........................மனைதொறும் பெறுகுவிர்” என்று முதற்கூறி, பிறகு அவ்வாறுண்ட நீவிர் விடியல்வரை வைகி விடிந்த பிறகு கழிவீராக; ஏனெனில், நீர் போகும் ஆறு...................”பரலவற்போழ் விற், |
“கரந்துபாம் பொடுங்கும் பயம்பு மாருளவே” (அதனால் “குறிக்கொண்டு......................நோக்கி |