பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.9, 1073

வறிதுநெறியொரீஇ     வலஞ்செயாக் கழிமின், “எனக் கூத்தருக்கு வைகறைப் பொழுதில் வழிக்கொண்டு
பாம்பொடுங்கும்  பள்ளங்களில் வீழ்ந்திடர்ப்படாமல் தங்கிக்  கதிர்விரிந்த  விடியற்காலத்தே புறப்படுமாறு
கூறுதலால்,  இவ்விரு  காலமும்  இருவேறு   சிறுபொழுதுகளே என்பது  தெள்ளத் தெளியக்கிடப்பதாகும்.
இன்னும் மலைபடுகடாத்திலேயே,
  

“வான்கண் விரிந்த விடியலேற் றெழுந்து” என 257 வது வரியிலும்
  

“நொய்ம்மா விறகின் ஞெகிழி மாட்டிப்
பனிசே ணீங்க வினிதுடன் றுஞ்சிப்
புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின்”

  

என   446   முதல்   448   வது  வரிகளிலும்  வைகறையின்  வேறுபட்ட    விடியற்காலத்தை  ஐயமற
விளக்கியிருப்பது பாராட்டிச் சிந்திக்கத்தக்கது. இனி, அகநானூற்றில் 37, 41-ஆம் பாட்டுகளில்,
  

“வைகு புலர் விடியல் னவயெயர்த் தாட்டி” எனவும்
வைகு புலர் விடியல் மைபுலம் பரப்ப” எனவும்
  

முறையே  இரவு   புலர்ந்து   கதிர்விரியும்   விடியற்காலம்   இனிது  விளக்கப்பெற்றும், 42வது பாட்டில்
“பெரும்      பெயல்      பொழிந்த       ஏமவைகறை”      எனவும்,      308வது       பாட்டில்
.................”கங்குல்..............ஆலியழிதுளி   பொழிந்த  வைகறை”  என வைகறை  விளக்கப்பெற்று மிருக்கிறது.
இன்னும், இரவிருள் கழிந்து பகலொளியெழுந்து படரும்  புலரியே  ‘விடியல்’ என்பதும், இருளறவொழியாத
இரவினிறுதியே  ‘வைகறை’  என்பதும்  பல  பழம் பாட்டுகளால்  விளக்கமாகும்.  ‘பெரும்  புலர் விடியல்’
(குறுந்-224)  (நற்  -60),  “தண்புலர்  விடியல்”  (60) “வைகுபுலர்  விடியல்” எனப்  பலவிடத்தும் புலரும்
பொழுதே  விடியல்  என  உரைக்கப்படுதலால்,  இரவிருள்  புலர்ந்து  பகலொளியலர்ந்த் நாட்காலையே
விடியல்  என  விளங்குகிறது. புலரி, வைகல், விடியல் என்ப  நாட்காலை  எனும்  ஒரு பொருள் குறிக்கும்
பல  பெயர்களாகப்  பயிலுதலுமிதனை  வலியுறுத்தும்.  இனி  வைகறை   இருள்  கழியாத   இரவினிறுதி
யென்பது  விளங்க  “வைகுறு  மீனின்  இனையத்தோன்றி”  (நற்-48)  என  மீனொளி  மறையாத இருள்
தங்கும் வான் சிறப்புடைய வைகறை என வருதலானுமறிக.