xiv |
பிரிவு |
பிரிவு என்பது பாலையின் உரிப்பொருளாகும். ஓதல் காரணமாக, பகை காரணமாக, தூது காரணமாகப் பிரிதல் எனப்பிரிவு மூன்று வகைப்படும் (27). மேற்கூறப்பட்ட மூவகைகளில் ஓதல் பிரிவும் தூதுப் பிரிவும் உயர்ந்தவர்க்கு உரியது. உயர்ந்தவர் என்பவர் அந்தணரும் அரசரும் ஆவர் (28). |
பகைவரின் பிரிவு மேற்கொள்ளுதல் அரசர்க்கு உரித்து அவருடன் ஏனோர் தலைவராயுழி அதனாலும் பிரிவு நிகழும் எனவும் கூறுவர் (29) |
முல்லை முதலாக நெய்தல் ஈறாக உள்ள நிலங்களில் ஆள்பவர் நெறிமுறை தப்பிய முறையால் நாடு பிழையாமல் இருக்கவும் தன்னுடைய பழைய நாட்டின் தன்மையைப் பெறவும், பிரியும் பிரிவாகும். இது ஒரு அறம் நிறுத்தல் காரணமாக அமையும் பிரிவாகும் (30). இப்பிரிவிற்குரியவர் நால்வகை வருணத்தாராகிய அரசர். அந்தணர், வணிகர், வேளாளர் ஆகியோர். (31). |
மன்னரின் செயல்களுள் காவல் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அக்காவற்பணிக்கு வணிகரும் வேளாளரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது (32). இங்கு அந்தணர் இடம் பெறாமை குறிப்பிடத்தக்கது |
உயர்படிப்பு அல்லது படித்தல் காரணமாகப் பிரியும் பிரிவு உயர்ந்தவர்க்கும் உரியதாகும், உயரந்தோராகிய வணிகருக்கும் உண்டு (33), அந்தணர் அரசர் ஆகியவர்களுக்கு உண்டு என்பது முன்பு கூறப்பட்டது. |
வேந்துவினையின் இயற்கை, தூதாகும். இத்தூது வணிகருக்கும் வேளாளருக்கும் முரித்து (34). பொருள்வயின் பிரிதல், மேற்கூறிய வணிகர் வேளாளருக்கு உரியதாகும் (35). |
உயர்ந்தோராகிய அந்தணர் பொருள் வயிற் பிரிதல் ஒழுக்கத்திற்கு உரியது (36). |
கலத்தில் பிரிவு அல்லது கடற்பிரிவு தலைமகளுடன் கிடையாது (37), இப்பிரிவு தலைமகனுக்குரிய செயலாகும். |