இல.வி.அ. 14. |
வேனில் நண்பகல் பின்பனி என்றிவை பான்மையின் உரிய பாலைக் கேற்றலும்
|
முத்து. அக.19. |
நண்பகல் வேனில் நடுத்திணைக் குரிய |
இளம்பூரணர் |
11. நடுவுநிலைத் ... ..........நெறித்தே. |
இது, பாலைக்குக் காலமும் இடனும் உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) நடுவு நிலைத்திணை - நடுவு நிலைத்திணையாகிய பாலையாவது, நண்பகல் வேனிலொடு முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்து - நண்பகற்பொழுது வேனிற் காலத்தொடு புணர்ந்து நின்றவழிக் கருதிய நெறியை உடைத்து. |
இஃது இளவேனில் முதுவேனில் என்னும் இருவகைப் பருவத்தின் கண்ணும் வரும் நண்பகற்பொழுது காலமாம் என்பதூஉம், ஆண்டு இயங்கும் நெறி நிலமாம் என்பதூஉம், உணர்த்தியவாறு. |
இளவேனிலாவது சித்திரைத் திங்களும் வைகாசித்திங்களும், முதுவேனிலாவது ஆனித் திங்களும் ஆடித்திங்களும். நண்பகலாவது பகற்பொழுதின் நடுக்கூறு. |
நச்சினார்க்கினியர் |
9. வைகறை விடியல் மருதம் |
இது நிலனுடைய நான்கற்குங் காலங் கூறி அந்நான்கற்கும் பொதுவாகிய பாலைக்குக் காலங் கூறுகின்றது. |
இதன் பொருள் :- நடுவுநிலைத்திணையே - பாலைத்திணை, நண்பகல் வேனிலொடு - எற்பாடுங் காலையும் என்னும் இரு கூற்றிற்கு நடுவணதாகிய ஒரு கூறு தான் கொண்டு வெம்மை செய்து பெருகிய பெரும் பகலோடும் இளவேனிலும் முதுவேனிலும் என்னும் இரண்டினோடும், முடிவு நிலை மருங்கின்பிரி |