பக்கம் எண் :

80தொல்காப்பியம் - உரைவளம்

வெனப்படுதற்கு    முடிவுடைத்தாகிய   குறிஞ்சியும்  முல்லையுமாகிய   ஒருமருங்கின்கண்ணே,  முன்னிய
நெறித்து ஆசிரியன் மனங்கொள்ளப்படும் நெறியையுடைத்து என்றவாறு.
  

நிலை   யென்றது  நிலத்தினை  முடிவுநிலைப்பகுதிக்கண் முன்னப்படு மெனவே அத்துனை யாக்கமின்றி
ஒழிந்த  மருதமும்  நெய்தலும் முடியா  நிலமாய்  அத்துணை  முன்னப்படாதாயிற்றுப்  பாலைக்கென்பதாம்.
பிரிவின்கண்  முடியவருவனவெல்லாம்   இவ்விரண்டற்கும்  அவை   குறைய  வருதலும்  உரையிற்கொள்க
என்னை?  சுரத்தருமை  அறியின்  இவள்   ஆற்றாளாமெனத்   தலைவன்   செலவழுங்குதலும், துணிந்து
போதலும்,  உடன்  போவலெனத்  தலைவி  கூறுதலும்,   அதனை  அவன்   விலக்கலும்,  இருதிரங்கலும்
போல்வன  பலவும்  முடிய  வரும்  நிலம்   குறிஞ்சியும்   முல்லையு  மாகலின்,  சுரத்தருமை  முதலியன
நிகழாமையின் மருதமும் நெய்தலும் அப்பொருண்முடிய வாராவாயின.
  

“நன்றே காதலர் சென்ற வாறே
யணிநிற விரும்பொறை மீமிசை
மணிநிற வுருவின தோகையு முடைத்தே”
 

(ஐங்குற்-431)
  

இது  சுரத்தருமை   நினைந்து  வருந்தினேனென்ற  தலைவிக்கு  அவ்வருத்த  நீங்கக்  கார்கால மாயிற்
றென்று ஆற்றுவித்தது.
  

இப்பாட்டு முதலிய பத்தும் முல்லையுட் பாலை.1
  

“கார்செய் காலையொரு கையறப் பிரிந்தோர்
தேர்தரு விருந்திற் றவிர்குதல் யாவது
மாற்றருந் தானை நோக்கி
யாற்றவு மிருத்தல் வேந்தனது தொழிலே”

(ஐங்குறு 451)


1. பத்து-ஐங்குறுநூறு  431-440  காதலர்  சென்ற ஆறு என்றது பாலை. அவர்சென்ற ஆறு இரும்பொறை
(காடு)  மேல்  நீலமணியுருவுடைய  மயில்களையுடையது. இதனால்  காட்டில்  மழை பெய்து மயில்கள்
அகவும்   இயல்பு  கூறப்பட்டதாதலின்  முல்லை  நிலமாயிற்று. முல்லையுட்பாலை-முல்லை  நிலத்தில்
நிகழ்ந்த பிரிவொழுக்கம்.