பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.1181

இது பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி பாசறைச் செய்தி கேட்டு வருந்தியது.
  

இப் பத்தும் முல்லையுட் பாலை2
  

“கருங்கால் வேங்கை மாத்தகட் டொள்வீ
யிருங்கல் வியலறை விரிப்பத் தாஅ
நன்மலை நாடன் பிரிந்தென
வொண்ணுதல் பசப்ப தெவன்கொ லன்னாய்.”

(ஐங்குறு 219)
 

இது வரைவிடைவைத்துப் பிரிந்துழித் தலைவி யாற்றாமை கண்டு தோழி கூறியது.
  

இவ்வைங்குறுநூறு குறிஞ்சியுட் பாலை3
  

“எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண்டுளி வீசிப்
பசலை செய்தன பனிபடு துறையே.”

(ஐங்குறு-141)
 

இவ்வைங்குறுநூறு   வரைவிடைவைத்துப்   பிரிந்துழி   ஆற்றுவிக்குந்   தோழிக்குத்   துறை   யின்ப
முடைத்தாகலான் வருத்திற்றெனத் தலைவி கூறியது.
  

இது சுரத்தருமை முதலியனவின்றி நெய்தற்குட் பாலை வந்தது.1
  

ஏனைய2 வந்துழிக் காண்க.
  

முந்நீர்  வழக்கஞ்  சிறுபான்மையாகலின் நெய்தற்கு முடியவாராதாயிற்று. இக்கருத்தானே பிரிவொழுக்கம்
மருதத்திற்கும் நெய்தற்குஞ் சிறுபான்மையாகப் புலனெறி வழக்கஞ் செய்யப்படும்.


2. கார்செய்காலை என்றதால் முல்லையும் பிரிந்தோர் என்பதால் பாலையும் காண்க. ஐங்குறு 451-460
  

3. வேங்கைமலர்  பாறையில் விரியும் மலை நாடன் என்பதால் குறிஞ்சி நிலமும் பிரிந்தென என்பதால்
பாலையொழுக்கமும் பெறப்படும்.
  

1. பனிபடுதுறை,  எக்கர்  என்பனவற்றாலும்  ஞாழல்  செருந்தி  என்னும் கருப்பொருளாலும் நெய்தல்
நிலமும் பசலை செய்தலால் பிரிவுண்மையும் காண்க.
  

2. ஏனைய-ஏனையது எனின் நன்று. அது மருதத்துட் பாலை.