பக்கம் எண் :

82தொல்காப்பியம் - உரைவளம்

எற்பாட்டுக்கு   முன்னர்த்தாகிய நண்பகலைப் பாலைக்குக் கூறவேண்டிப் பின் வைத்தாரேனும், பெரும்
பொழுதிற்கு   முற்கூறுதலின்   ஒருவாற்றாற்  சிறுபொழுதாறும்  முறையே  வைத்தாராயிற்று  காலையும்
மாலையும்  நண்  பகலன்ன  கடுமை கூரச்3 சோலை தேம்பிக் கூவன்4 மாறி, நீரும் நிழலுமின்றி, நிலம்
பயந்  துறந்து,  புள்ளும்  மாவும்  புலம்புற்று5  இன்பமின்றித்  துன்பம் பெருகுவதொரு காலமாதலின்,
இன்பத்திற்கு இடையூறாகிய பிரிவிற்கு நண்பகலும் வேனிலுஞ் சிறப்புடைத்தாயிற்று.
  

“தெள்ளறல் யாற்றுத் திரைமண லடைகரை
வண்டுவரி பாடத் தண்போ தலர்ந்து
தாதுந் தளிரு மேதகத் துவன்றிப்
பல்பூஞ் சோலைப் பன்மலர் நாற்றமொடு
செவ்வித் தென்ற னொவ்விதிற் றாகிக்
குயில் கூஉக் குரலும் பயில்வதன் மேலும்
நிலவுஞ் சாந்தும் பலவுறு முத்து
மின்பம் விளைக்கு நன்பொருள் பிறவும்
பண்டைய போலா தின்ப மிகத்தரும்”

  

இளவேனிற்காலத்து,     பொழில்  விளையாடியும்  புதுப்பூக்கொய்தும்  அருவியாடியும்  முன்னர்
விளையாட்டு  நிகழ்ந்தமை  பற்றிப்  பிரிந்து  கிழத்தி  மெலிந்துரைக்குங் கிளவி பயின்று வருதலானும்,
உடன்போக்கின்கண்    அக்காலம்    இன்பம்    பயக்குமாதலானும்,    இளவேனிலோடு    நண்பகல்
சிறந்ததெனப்பட்டது.   பிரிந்த   கிழத்தி  இருந்து  கூறுவன  கார்கால  மன்மையின்  முல்லையாகா
  

உதாரணம் :-
 

“கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை
வறனுற லங்கோ டுதிர வலங்கடந்து
புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை
யிரவுக்குறும் பலற நூறி நிரை பகுத்
திருங்கன் முடுக்கர்த் திற்றி கெண்டுங்
கொலைவி லாடவர் போலப் பலவுடன்


3. நண்பகல்போல வெயிலின் கொடுமைமிக
 

4. கூவல் - கிணறு
 

5. புலம்புற்று - தனிமையுற்று
மின்பம் விளைக்கு நன்பொருள் பிறவும்
பண்டைய போலா தின்ப மிகத்தரும்