பெருந்தலை யெருவையொடு பருந்துவந் திறுக்கு மருஞ்சுர மிறந்த கொடியோர்க் கல்கலு மிருங்கழை யிறும்பி னாய்ந்து கொண் டறுத்த நுணங்குகட் சிறுகோல் வணங்கிறை மகளிரோ டகவுநர்ப் புரந்த வன்பிற் கழறொடி நறவுமகி ழிருக்கை நன்னன் வேண்மான் வயலை வேலி வியலு ரன்ன நின் னலர்முலை யாகம் புலம்பப் பலநினைந் தாழ லென்றி தோழி யாழவென் சுண்பனி நிறுத்த லெளிதோ குரவுமலர்ந் தற்சீர நீங்கிய வரும்பத வேனி1 லறலவிர் வார்மண லகல்யாற் றடை கரைத் துறையணி மருதமொ டிகல்கொள வோங்கிக் கலுழ்தளி ரணிந்த விருஞ்சினை மாஅத் திணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப் புகைபுரை யம்மஞ் சூர நுகர்குயி லகவுங் குரல்கேட் போர்க்கே” |
(அகம்-97) |
இது வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி கூறியது. |
இக்களிற்றியானை நிரையுள் இருவகை வேனிலும் பாலைக் கண் வந்தன. |
9. நடுவுநிலை............நெறித்தே |
பாரதியார் |
கருத்து :- இது பாலைக்குப் பருவமும் பொழுதும் கூறுகிறது. |
பொருள் :- நடுவுநிலைத் திணையே - அன்பினைந்திணையுள் நடுநின்ற பாலைத்திணை; நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் - நடுப்பகல் முதிர் வேனிலொடு கூடப் பொருந்துமிடத்து; முன்னிய நெறித்து - அது பிரிவுக்குச் சிறந்ததாகக் கருதும் முறைமையுடைத்தாகும். |
குறிப்பு :- ஏகாரம், முன்னது, இசைநிறை, பின்னது அசை. |
1. அற்சிரம்-இளவேனில், வேனில்-முதுவேனில் |