பக்கம் எண் :

84தொல்காப்பியம் - உரைவளம்

நண்பகலாகிய     சிறுபொழுதும் முதிர்வேனிலாகிய  பெரும்பொழுதும் பாலைத்திணையாகிய பிரிவுக்குத்
தனித்தனியுரிமை  கொள்ளுதலேயுமன்றி,  இவை   தம்முட்  கூடிய நிலையில்  முதிர்வேனிலின்  நண்பகல்
பிரிவுக்கு    மிகவும்   சிறப்புரிமையுங்   கொள்ளுமென்பது    இச்சூத்திரத்தில்    விளக்கப்    படுகிறது.
முதிர்வேனிற்காலம்  ஆனியும்  ஆடியுமாகிய   திங்களிரண்டுமாம்.  இதில்,  வேனிலென்பது  முதிர்வேனிற்
பருவத்தையே  குறிக்கும்;  அதுவே  பிரிவுக்  குரித்தாகலின்,  முதிர்வேனிலிற்  பிரிந்தார்  கார்  காலத்தில்
கூடுவர்  இளவேனில்  கூடுதலுக்கே  உரிய  பருவமாகும்.  பின்பனிக்  காலத்தில்  பிரிந்தார் இளவேனிலிற்
கூடுவர், முதிர்வேனில் பிரிவுக்குரித்தாதற்குச் செய்யுள்:-
  

“உறைதுறந் திருந்த புறவிற் றனாது
செங்கதிர்ச் செல்வன் தெறுதலில், மண்பக
உலகு மிகவருந்தி அவர்வுறு காலைச்
1
சென்றன ராயினும் நன்றுசெய் தனரெனச்
சொல்லித் தெளிப்பவும் தெளிதல் செல்லாய்
செங்கோல் வாளிக் கொடுவி லாடவர்
வம்ப மாக்க ளுயிர்த்திறம் பெயர்த்தென
வெங்கடங் றடைமுதற் படுறை தழீஇ
உறுபசிக் குறுநரி குறுகல் செல்லாது
மாறுபுறக் கொடுக்கும் அத்தம்
ஊறில ராகுத லுள்ளா மாறே.”

(நற்-164)
 

சிவலிங்கனார்
  

“நால்வகை     யொழுக்கங்களிலும்  நிற்றலால்  நடுவுநிலைத்திணை  எனப்படும் பாலைத்திணையானது
நண்பகலாகிய    சிறுபொழுதும்    இளவேனில்     முதுவேனிலாகிய    இருவகைப்பெரும்    பொழுதும்
ஆகியவற்றோடு  முடிதல் நிலைக்கும் பக்கமானது முந்து நூலாரால்  நினைந்து  கொள்ளப்பட்ட  மரபாகும்”
என்பது இச் சூத்திரப்பொருள்


1. உறைதுறந்......காலை என்பது முதிர்வேனிலைக் குறிக்கும்