பக்கம் எண் :

86தொல்காப்பியம் - உரைவளம்

(இ-ள்) பின்பனியும் உரித்து எனமொழிப-பின்பனிக் காலமும் உரித்து என்று கூறுப.
  

இது  வேறோதினமையான்,  வேனில்  போலச்  சிறப்பு  இன்றெனக்  கொள்க.  பின்பனியாவது  மாசித்
திங்களும் பங்குனித் திங்களும்.
  

அஃதற்றாக     இவ்வறுவகைப்  பருவமும்  அறுவகைப்  பொழுதும்  இவ்வைந்திணைக்கு  உரியவாறு
என்னையெனின்,  சிறப்பு நோக்கி என்க.  என்னை  சிறந்தவாறு  எனின்; முல்லையாகிய  நிலனும், நிலனும்,
வேனிற்  காலத்து வெப்பம் உழந்து மானும்  புதலும்  கொடியும்  கவினழிந்து கிடந்தன  புயல்கள் முழங்கக்
கவின்  பெறும்  ஆகலின்,  அதற்கு  அது  சிறந்ததாம்.  மாலைப்பொழுது  இந்நிலத்திற்கு இன்றியமையாத
முல்லை  மலருங்காலம்  ஆதலானும்  அந்நிலத்துக்  கருப்பொருளாகிய  ஆனிரை  வருங்காலமாதலானும்,
ஆண்டுத்  தனியிருப்பார்க்கு  இவை   கண்டுழி  வருத்தம்   மிகுதலின்,   அதுவும்   சிறந்தது  ஆயிற்று.
குறிஞ்சிக்குப்  பெரும்பான்மையும்   களவிற்   புணர்ச்சி  பொருளாதலின்   அப்புணர்ச்சிக்குத்  தனிஇடம்
வேண்டுமன்றே.   அது  கூதிர்க்காலத்துப்   பகலும்   இரவும்  நுண்துளி  சிதறி  இயங்குவார்  இலராம்
ஆதலான்,   ஆண்டுத்   தனிப்படல்   எளிதாகலின்,    அதற்கு    அதுசிறந்தது.   நடுநாள்   யாமமும்
அவ்வாறாகலின்   அதுவும்  சிறந்தது.  மருதத்திற்கு  நிலன்   பழனஞ்சார்ந்த   இடமாதலான்,    ஆண்டு
உறைவார்  மேன்  மக்களாதலின்;  அவர்  பரத்தையிற்   பிரிவுழி   அம்மனையகத்து  உறைந்தமை பிறர்
அறியாமை மறைத்தல் வேண்டி வைகறைக்கண்1    தம்மனையகத்துப்  பெயரும்வழி,  ஆண்டு மனைவி1
அந்நிலத்திற்குச்  சிறந்தன.  நெய்தற்குப்   பெரும்பான்மையும்   இரக்கம்  பொருளாதலின்  தனிமையுற்று
இரங்குவார்க்குப் பகற்பொழுதினுள் இராப்பொழுது மிகுமாதலின் அப்பொழுது  வருதற்கேதுவாகிய எற்பாடு
கண்டார் இனி வருவது மாலையென வருத்தமுறுதலின், அதற்கு அது சிறந்தது என்க.


1. அவை  -  வைகறையும்  விடியலும்  வைகறைக்குக்கூறிய   காரணமே   விடியலுக்கும்  பொருந்தும்
ஆதலின் அவை என்றார்.