பக்கம் எண் :

88தொல்காப்பியம் - உரைவளம்

10. பின்பனி. . . . . மொழிப
  

பாரதியார்
  

கருத்து :- இது பிரிவுக்குப் பின்பனியும் உரித்தாதல் கூறுகிறது.
  

பொருள் :-  (முதிர்வேனிலேயுமன்றி)     பின்பனிக்காலமும்    பிரிவு    சுட்டும்   பாலைத்திணைக்
குரித்தாகுமென்று  கூறுவர்  (புலவர்)  பின்பனி  பிரிவுப்  பருவமாதல்,   பின்வரும்  ஆலத்தூர்  கிழாரின்
குறும்பாட்டிற் காண்க.
  

“அம்ம, வாழி, தோழி! முன்னின்று
‘பனிக்கடுங் குரையம், செல்லாதீ’ மெனச்
சொல்லின மாயிற் செல்லார் கொல்லோ?
ஆற்றய லிருந்த இருந்தோட் டஞ்சிறை
நெடுங்காற் கணந்துள் ஆளறி வுறீஇ
ஆறுசெல் லம்பலர் படைதலை பெயர்க்கும்
மலையுடைக் கானம் நீந்தி
நிலையாப் பொருட் பிணிப் பிரிந்திசி னோரே.”

(குறுந்-350)
  

பின்பனிப் பிரிந்தோர் இளவேனிலிற் கூறுவதற்குச்
  

செய்யுள்:-
  

“கோங்கங் குவிமுகை யவிழ ஈங்கை
நற்றளிர் நயவர நுடங்கு
முற்றா வேனின் முன்னிவந் தோரே.”

(நற்-86)
 

“...........புணர்மினோ என இணமிசைச்
செங்க னிருங்குயி லேதிர்குரல் பயிற்று
மின்ப வேனிலும் வந்தன்று.”

(நற்-224)
  

என்னும்   பெருங்கடுக்கோவின்   நற்றிணைப்   பாட்டடிகளும்  பிரிந்த  காதலர்  திரும்பக்கூடும்  “காமர்
வேனின்மன் இது” என்னும் அகப்பாட்டடியும்.
  

“ஊடீனீ ரெல்லா முருவிலான் நன்னாணை
கூடுமி கனன்று குயில் சாற்ற - நீடிய
வேனற்பா ணிக்கலந்தாண் மென்பூந் திருமுகத்தைக்
கானற்சா ணிக்கலந்தாய் காண்.”