| படர்க்கை முப்பெயரோடு சுட்டுப்பெயர் அணையின் = படர்க்கை இடத்தையுடைய உயர்திணைப்பெயர் அஃறிணைப்பெயர் விரவுப்பெயர் என்னும் மூவகைப் பெயர்களோடு சுட்டுப்பெயர் சேரின், பின் வரும் வினையெனின் = அச்சுட்டுப் பெயர் அம்மூவகைப் பெயர்க்கும் பின் வரும் அவ்விடத்தே வினையாகிய முடிக்கும்சொல் வருமாயின் , பெயர்க்கு எங்கும் மருவும் = அம்முடிக்கும் சொல் இல்லையாயின் அப்பெயர்க்குப் பின்னும் முன்னும் வரும் , வழக்கிடை = இம்மரபு வழக்கத்தின் இடத்தவாம் , செய்யுட்கு ஏற்புழி - செய்யுளிடத்தே நியதி இன்றி வேண்டியவாறே வரப்பெறும். 1. நம்பி வந்தான் , அவனுக்குச் சோறிடுக எனவும், எருது வந்தது, அதற்குப் புல்லிடுக எனவும், சாத்தன் தெய்வம் அவனுக்குப் பலி இடுக எனவும், சாத்தன் வந்தது அதற்குப் புல் இடுகஎனவும் வினை நிகழ் வழிச் சுட்டுப்பெயர் பின் வந்தன. 2. நம்பியவன், அவன் நம்பி எனப் பெயர்க்குப் பின்னும் முன்னும் சுட்டுப்பெயர் வந்தன. 3. "அவனணங்கு நோய்செய்தா னாயிழாய் வேலன் விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி முகனமர்ந் - தன்னை யலர்கடப் பந் தாரணியி னென்னைகொல் பின்னை ஆதன்கண் விழைவு" எனச் செய்யுளில் வினை வருவழியும் முன் வந்தது. சுட்டுப்பெயர் செய்யுளிடத்துப் பின் வருதல் வழாநிலை; முன்வருதல் வழுவவைதி, வழக்கிடத்து வினை நிகழ் வழிப் பின்வருதல் வழாநிலை. 43
|