12

என்னை?

1"மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புன லுலகமும்
வருணன் மேய பெருமண லுலகமும்
முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே"

என்றாராகலின்.

மற்றிதனுட் பாலைக்குத் திணை இல்லையாலோ வெனின், அது நிலம் இன்மையான் ஒழிக்கப்பட்டது எனக் கொள்க. அஃதேல் ஈண்டுக் கூறியது என்னையெனின், மதுரைக் காஞ்சியுள் - 2"பாலை சான்ற சுரஞ்சார்ந் தொருசார்" என்பதனானும், பிறவாற்றானுங் கூறப்பட்டது எனக்கொள்க. அஃதற்றாக, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று இம்முறை எண்ணாது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என எண்ணிய தென்னையோ வெனின் அச்சூத்திரத்துள், "சொல்லிய முறையாற் சொல்லவும் படும்" என்ற உம்மையாற் பிறவாற்றானும் சொல்லப்படும் என்பதுபட நிற்றலானும் பத்துப் பாட்டும் கலித்தொகையும் ஐங்குறு நூறும் கீழ்க்கணக்கும், 3சிற்றட்டகமு முதலாகிய சான்றோர் செய்யுள்கள் எல்லாம் வேண்டிய முறையானே வைத்தலானும் இவ்வாற்றான் எண்ணப்பட்டது எனக்கொள்க. மற்றுக் குறிஞ்சி முதலாகிய பெயர் இந் நிலங்கட்கு எய்தியவாறு என்னையெனின், உலகத்தார் வழங்கிப் போந்த முறையாம் எனக் கொள்க. அன்றியும் குறிஞ்சியும் பாலையும் முல்லையும் மருதமும் நெய்தலும் என்னும் பொருள்கள் அவ்வந்நிலத்திற்குச் சிறந்தனவாதலால் அவற்றாற் பெற்ற பெயர் எனவுமாம்.

என்னை?

4"கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கும்," எனவும், "கோடுறு பல்கால் வாலிணர்ப் பாலை," எனவும்


1. தொல், பொருள், அகத்திணையியல், சூ: 5.

2. பத்துப்பாட்டு, மதுரைக் காஞ்சி, அடி: 314.

3. இதனைச் சிற்றடக்கம் என்றுங் கூறுப.

4. குறுந்தொகை. செய்: 3.