10 பகற்குறி பகற்குறியின் வகை 151. கூட்டல் கூடல்பாங்கிற் கூட்டல் வேட்டலென் றொருநால் வகைத்தே பகற்குறி. (இ - ம்.) பகற்குறியின் வகை உணர்த்துதல் நுதலிற்று.(இ - ள்.) கூட்டல் முதலாக வேட்டல் ஈறாக நான்குவகையினை உடைத்துப் பகற்குறி என்றவாறு.(35) பகற்குறியின் விரி 152. குறியிடங் கூறல் முதலாப்பெறலரும் விருந்திறை விரும்பல் ஈறாப் பொருந்தப் பகர்ந்தபன் னிரண்டும் பகற்குறி விரியே. (இ - ம்.) பகற்குறியின் விரி உணர்த்துதல் நுதலிற்று.(இ - ள்.) குறியிடங் கூறல் முதலாக விருந்திறை விரும்பல் ஈறாக மேற்பாங்கியிற் கூட்டத்துள் எடுத்தோதப்பட்ட பன்னிரண்டும் பகற்குறி விரியாம் என்றவாறு.உதாரணம் மேற்காட்டினவெனக் கொள்க. (36) ஒருசார் பகற்குறியின் வகை 153. இரங்கல் வன்புறையிற்செறிப் புணர்த்தலென் றொருங்கு மூவகைத் தொருசார் பகற்குறி.(இ - ம்.) ஒருசார் பகற்குறியின் வகைஉணர்த்துதல் நுதலிற்று.(இ - ள்.) இரங்கலும், வன்புறையும், இச்செறிப்புணர்த்தலும் என மூன்று வகையினை உடைத்து ஒருகூற்றுப் பகற்குறி என்றவாறு.(37) ஒருசார் பகற்குறியின் விரி 154. கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம் பொழுதுகண் டிரங்கலும் பாங்கி புலம்பலும் தலைவன் நீடத் தலைவி வருந்தலும் தலைவியைப் பாங்கி கழறலும் தலைவி
|