என்னை? 1"முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டி னியல்பென மொழிப வியல்புணர்ந் தோரே" என்றாராகலின். (8) நிலமாகிய முதற்பொருளின் வகை 9. வரையே சுரமே புறவே பழனந் திரையே யவையவை சேர்தரு மிடனே எனவீ ரைவகைத் தனையியல் நிலமே. (இ - ம்.) முதற்பொருளின் பாகுபாடாகிய இரண்டனுள்ளும் முன்னதாகிய நிலத்தின் வரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்சொல்லப்பட்ட இயல்பினையுடைய நிலம் என்னும் முதற்பொருள், வரையும் வரைசார்ந்தவிடமும், சுரமுஞ் சுரஞ்சார்ந்தவிடமும், புறவும் புறவு சார்ந்தவிடமும், பழனமும் பழனஞ் சார்ந்தவிடமும், கடலும் கடல் சார்ந்தவிடமும் எனப் பத்துவகையினை யுடைத்து என்றவாறு. இவற்றிற்கு விதி மேலே காட்டப்பட்டன. இவற்றை ஐந்திற்கும் நிரனிறையாகக் கொள்க. புறவு எனினும் காடு எனினும் ஒக்கும். பழனம் என்புழி ஏகாரந் தொக்கதாயினும் குற்றமின்றாம். என்னை? 2"எண்ணே கார மிடையிட்டுக் கொளினு மெண்ணுக்குறித் தியலு மென்மனார் புலவர்" என்றாராகலின், அனையவியல் எனற்பாலது அனையியல் என விகாரமாயிற்று. (9) காலமாகிய முதற்பொருளின் வகை 10. பெரும்பொழு தென்றா சிறுபொழு தென்றா இரண்டு கூற்ற தியம்பிய பொழுதே.
1. தொல், பொருள், அகத்திணையியல், சூ: 4. 2. தொல், சொல், இடையியல், சூ: 40.
|