தலைமகள் நேர்ந்தமை பாங்கி தலைமகற்குரைத்தற்குச் செய்யுள்: 1"பரவாத வண்ணம் பரவியும் பாதம் பணிந்துநெஞ்சங் கரவாத பொன்னைநின் காரணமாகக் கயிலையென்றே வரவா தவனஞ்சும் வெண்மா ளிகைத்தஞ்சை வாணன்வெற்பா இரவாத வண்ணமெல் லாமிரந் தேனிவ் விரவிடையே." என வரும். பாங்கி தலைமகனைக் குறியிடத்து நிறுத்திவந்து தாய்துயில் அறிதற்குச் செய்யுள்: 2"மாகந் தரியலர்க்கீந்தருள் வாணன்றென் மாறைவெற்பின் மேகந் தருமின் னிடையன்ன மேவிரை நாண்மலர்வேய் நாகந் தழுவுங் குடம்பையின் வாய்நடு நாளிரவிற் சோகந் தவிர்வில வாய்த்துயி லாததென் றோகைகளே." என வரும். பாங்கி தலைமகட்குத் தலைமகன் வரவு அறிவித்தற்குச் செய்யுள்: 3"கந்தார நாணுங் கனிந்தசொல் லாய்நங் கடிமனைக்கே வந்தா ரவாவின் பெருமையி னாற்றஞ்சை வாணன்வெற்பிற் கொந்தா ரசோகந் தருஞ்செழும் போதுங் கொழுந்தழையுந் தந்தா ரகலந் தழீஇயக லாது தணந்தவரே." எனவும், 4"அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத் தண்ணயத் தமன்ற கூதளங் குழைய வின்னிசை யருவிப் பாடுமென் னதூஉங் கேட்டியோ வாழிவேண் டன்னைநம் படப்பை யூட்டி யன்ன வொண்டளிர்ச் செயலை யோங்குசினைத் தொடுத்த வூசல் பாம்பென முழுமுத றுமிய வுருமெறிந் தன்றே பின்னுங் கேட்டியோ வெனவுமஃ தறியா ளன்னையுங் கனைதுயின் மடிந்தன ளதன்றலை மன்னுயிர் மடிந்தன்றாற் பொழுதே காதலர் வருவ ராயிற் பருவ மிதுவெனச் சுடர்ந்திலங் கெல்வளை ஞெகிழ்ந்த நம்வயிற் படர்ந்த வுள்ளம் பழுதின் றாக வந்தனர் வாழி தோழி யந்தரத்
1. த. கோ. செ: 172. 2. த. கோ. செ: 173. 3. த. கோ. செ: 174. 4. அகம். செ: 68.
|