149

திமிழ்பெய றலைஇய வினப்பல கொண்மூத்
தவிர்வில் வெள்ளந் தலைத்தலை சிறப்பக்
கன்றுகா லொய்யுங் கடுஞ்சுழி நீத்தம்
புன்றலை மடப்பிடிப் பூசல் பலவுடன்
வெண்கோட் டியானை விளிபடத் துழவு
மகல்வாய்ப் பாந்தட் படாஅர்ப்
பகலு மஞ்சும் பனிக்கடுஞ் சுரனே."

எனவும் வரும்.

பாங்கி தலைமகளைக் குறியிடத்துக் கொண்டு சேறற்குச் செய்யுள்:

1"மின்னே யயிலொடு மின்விளக் காவந்த வெற்பரைநாம்
பொன்னே யெதிர்கொளப் போதுகம் வாபுவி யேழினுக்குந்
தன்னேயம் வைத்தருள் சந்திர வாணன் றமிழ்ச்சிலம்பின்
நின்னே ரியன்மயில் கண்டுயி னாக நிழலகத்தே."

என வரும்.

பாங்கி தலைமகளைக் குறியிடத்துய்த்து நீங்கற்குச் செய்யுள்:

2"மந்தார மன்னகை வாணன்றென் மாறை மயிலனையாய்
நந்தா வனப்பொய்கை நான்கொய்கு வேன்குழ னாணுங்கங்குற்
கொந்தார் தெரியனின் செங்கனி வாயொடுங் கொங்கையொடும்
பைந்தா மரையையுஞ் சேதாம் பலையும் பகைப்பித்ததே."

என வரும்.

தலைமகன் தலைமகளைக் குறியிடத்து எதிர்ப்படுதற்குச் செய்யுள்:

3"முதிரா முலையிப் பனியந்த கார முனியவல்ல
கதிரா யிரமில்லை யேழ்பரித் தேரில்லைக் காவல்வெய்யோற்
கெதிராதல் சோமற் கியல்வதன் றேநும்மில் யார்திறந்தார்
மதுரா புரித்தமிழ் தேர்வாணன் மாறை வனத்துவந்தே."

என வரும்.

தலைமகள் ஆற்றினதருமை நினைந்து இரங்கற்குச் செய்யுள்:

4"செழியன் கயலைத் திசைவைத்த வாணன்றென் மாறையென்மேற்
கழியன் புடையநின் கால்கண்க ளாகக் கராம்பயிலுங்
குழியன்றி யும்வெஞ் சுழியொன்றும் யாறுங் குழீஇக் கொடிதாம்
வழியன்ப நீயெங்ங னேவந்த வாறிம் மழையிருளே."
எனவும்,



1. த. கோ. செ: 175.

2. த. கோ. செ: 176.

3. த. கோ. செ: 177.

4. த. கோ. செ: 178.