1"பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே நீர்பரந் தொழுகலி னிலங்கா ணலையே யெல்லை சேறலி னிருள்பெரிது பட்டன்று பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல் யங்குவந் தனையோ வோங்கல் வெற்ப வேங்கை கமழுமெஞ் சிறுகுடி யாங்கறிந் தனையோ நோகோ யானே." எனவும் வரும். தலைமகன் தலைவியைத் தேற்றற்குச் செய்யுள்: 2"வெயிலுந் தரவிந்த மென்மல ரன்னமும் விந்தைவெற்றி மயிலும் பயில்புயன் வாணன்றென் மாறைநின் வாள்விழிபோல் அயிலுங் குயின்மொழி நின்னிடை போன்மின்னு மாடளிகள் பயிலுந் தொடைநின் குழல்போ லிருளைப் பருகினவே." எனவும், 3"குருதி வேட்கை யுருகெழு வயமான் வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கு மரம்பயில் சோலை மலியப் பூழியர் உருவத் துருவி னாண்மேய லாரு மாரி யெண்கின் மலைச்சுர நீளிடை நீநயந்து வருத லெவனெனப் பலபுலந் தழுதனை யுறையு மம்மா வரிவை பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை விரிகதி ரிளவெயிற் றோன்றி யன்னநின் மாணல முள்ளி வரினெமக் கேம மாகு மலைமுத லாறே," எனவும் வரும். புணர்தற்குச் செய்யுள்: 4"சுழிநீ ரலைகடற் றொல்லுல கேழினுந் தோற்றும்வண்மைக் கழிநீடு மாடக மேருவின் மீதினுங் காவல்கொண்டு வழிநீள் புகழ்கொண்ட வாணன்றென் மாறை வரையின்மலர்ப் பொழினீழ லும்ப ரமுதனை யாரைப் புணர்ந்தனமே."
1. குறு. செ: 355. 2. த. கோ. செ: 179. 3. நற்றிணை, செ: 192. 4. த. கோ. செ: 180.
|