151

1"தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா
லம்மா வரிவை முயக்கு."

எனவும் வரும்.

புகழ்தற்குச் செய்யுள்:

2"மண்ணார் பெரும்புகழ் மாறன்றென் மாறை வரையகிலுந்
தண்ணார முங்கமழ் சார்வருஞ் சாரலிற் சார்ந்துறையும்
பெண்ணா ரணங்கன்ன நின்முகந் தான்கண்ட பின்னுமுண்டோ
கண்ணார் தடங்களின் வாயொடுங் காத கமலங்களே."

என வரும்.

தலைமகனைத் தலைமகள் குறிவிலக்கற்குச் செய்யுள்:

3"மூரற் கதிர்முத்த வார்முலை யாவியின் மூழ்கத்தனி
வாரற்க நீதஞ்சை வாணன்வெற் பாவய மாவழங்கும்
வேரற் கடிய கவலையி னூடு வெயிலவற்குஞ்
சாரற் கருமைய தாலிருள் கூருமெஞ் சாரலிலே,"

எனவும்,

"இருள்பே ருலகின் வார லான்ற
கோட்டுமா வழங்குங் காட்டக நெறியே."

எனவும் வரும்.

தலைமகன் தலைமகளை இல்வயின் விடுத்தற்குச் செய்யுள்:

4"மல்லையம் போர்வென்ற வாணன்றென் மாறைநின் மாளிகையாந்
தொல்லையம் போருகந் தேடவுங் கூடுந் தொடித்தளிரான்
முல்லையும் போது முகையுங்கொய் யாது முகிழ்முலையாய்
செல்லையம் பொற்பளிங் கிற்றலம் பாதஞ் சிவப்பிக்கவே."

என வரும்.

பாங்கி தலைமகளை எய்திக் கையுறை காட்டற்குச் செய்யுள்:

5"முகையா யலராய் முலைக்குநின் வாய்க்கு முறைமுறையே
பகையா முளரியுஞ் சேதாம் பலுமிவை பைங்கழுநீர்
வகையார் தொடைபுனை வாணன்றென் மாறையின் மௌவலன்ன
நகையா யவையிவை நின்குழற் காமுல்லை நாண்மலரே."

என வரும்.


1. திருக்குறள், 1107.

2. த. கோ. செ: 181.

3. த. கோ. செ: 182.

4. த. கோ. செ: 183.

5. த. கோ. செ: 184.