152

பாங்கி தலைமகளை இற்கொண்டேகற்குச் செய்யுள்:

1"ஒல்கா விருண்மணந் தொல்கரும் போழ்தி னுணர்ந்துநம்மை
நல்கா வியல்பன்னை நாடினு நாடு நடந்தருணீ
மல்காவி சூழ்தஞ்சை வாணன்றென் மாறையின் வள்ளையின்மேற்
செல்காவி யன்ன விழித்திரு வேநின் றிருமனைக்கே."

என வரும்.

பிற்சென்று தலைமகனைப் பாங்கி வரவு விலக்கற்குச் செய்யுள்:

2"வெம்போர் முருகென்ன வேல்வல னேந்தி வெறிதிங்ஙனே
வம்போர் நகரெல்லி வாரல்வெற் பாமரு வாவரசர்
தம்போர் கடந்த தடம்புய வாணன் றமிழ்த்தஞ்சைநாட்
டம்போ ருகமல்ல வோதிருக் கோயி லணங்கினுக்கே."

எனவும்,

3"தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்
மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉ
மணங்கென வஞ்சுவர் சிறுகுடி யோரே;
ஈர்ந்த ணாடையை யெல்லி மாலையை
சோர்ந்துவீழ் கதுப்பினாள் செய்குறி நீவரி
னொளிதிகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர்
களிறென வார்ப்பவ ரேனல்கா வலரே."

எனவும் வரும்.

தலைமகன் மயங்கற்குச் செய்யுள்:

4"வஞ்சங் கலந்த கலிவென்ற வாணன்றென் மாறைவெற்பிற்
றஞ்சங் கலந்தசொற் றையலும் யானுந் தனித்தனியே
நெஞ்சங் கலந்த நிலைமையெல் லாங்கண்டு நீயமுதி
னஞ்சங் கலந்தனை யேநனை வார்குழ னன்னுதலே."

என வரும்.

தோழி தலைமகள் துயர் கிளந்து விடுத்தற்குச் செய்யுள்:

5"முன்னூ ரரவுந் தெரியா விருணெறி முன்னிநைய
மின்னூர் புனையிழை மின்னனை யாளுய்ய வேலின்வெம்போர்


1. த. கோ. செ: 185.

2. த. கோ. செ: 186.

3. கலித். குறிஞ்சிக். செ: 16.

4. த. கோ. செ: 187.

5. த. கோ. செ: 188.