153

மன்னூர் களிறு திறைகொண்ட வாணன்றென் மாறையன்ன
நின்னூ ரம்புகுந் தாற்குறி காட்டு நெடுந்தகையே."

எனவும்,

1"கான மானதர் யானையும்வழங்கும்
வான மீமிசை யுருமுநனி யுரறும்
அரவும் புலியு மஞ்சுதக வுடைய
விரவழங்கு சிறுநெறி தமியை வருதி
வரையிழி யருவிப் பாட்டொடு பிரச
முழவுசேர் நரம்பி னிம்மென விமிரும்
பழவிற னனந்தலைப் பயமலை நாட
மன்றல் வேண்டினும் பெறுகுவை யொன்றோ
வின்றுதலை யாக வாரல் வரினே
யேமுறு துயரமோ டியாமிவ ணொழிய
எற்கண்டு பெயருங் காலை யாழநின்
கற்கெழு சிறுகுடி யெய்திய பின்றை
யூதல் வேண்டுமாற் சிறிதே வேட்டொடு
வேய்பயி லழுவத்துப் பிரிந்தநி
னாய்பயிர் குறிநிலைக் கொண்ட கோடே."

எனவும் வரும்.

திருமகட் புணர்ந்தவன் சேறற்குச் செய்யுள்:

2"இருங்குன் றனமதி லெம்பதிக் கேக லெளிது செம்மை
தருங்குங் குமமுலைத் தையனல் லாய்தஞ்சை வாணன்வெற்பிற்
கருங்குஞ் சரவினம வெண்சிங்க வேறஞ்சுங் கங்குலினெம்
மருங்குஞ் சுடர்விளக் காமட வார்குழை மாணிக்கமே."

எனவும்,

3"நெஞ்சுநடுங் கரும்படர் தீர வந்து
குன்றுழை நண்ணிய சீறூ ராங்கட்
செலீஇய பெயர்வோள் வணர்சுரி யைம்பா
னுண்கோ லகவுநர்ப் புரந்த பேரிசைச்
சினங்கெழு தானைத் தித்தன் வெளிய
னிரங்குநீர்ப் பரப்பிற் கானலம் பெருந்துறைத்
தனந்தரு நன்கலஞ் சிதையத் தாக்குஞ்
சிறுவெள் ளிறவின் குப்பை யன்ன
வுறுபகை தரூஉ மொய்ம்மூசு பிண்டன்
முனைமுர ணுடையக் கடந்த வென்வே
லிசைநல் லீகைக் களிறுவீசு வண்மகிழ்ப்
பாரத்துத் தலைவ னார நன்ன


1. அகம். செ: 318.

2. த. கோ. செ: 189.

3. அகம். செ: 152.